குரூப்- 2 தேர்வு கேள்வித்தாள் வெளியானதாக பரபரப்பு - தினமலர்
கடலுார்:கடலுாரில், நேற்று நடந்த குரூப் -2 தேர்வின், முக்கிய கேள்விகளுக்கான விடை எழுதப்பட்ட, ஜெராக்ஸ் நகலை, தேர்வு எழுதிய சிலர் கண்டெடுத்து உள்ளனர். இதனால், கேள்வித்தாள் வெளியாகி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும், குரூப் -2 தேர்வு, நேற்று காலை, 10:00 மணிக்கு துவங்கியது.கடலுாரில், காலை, 9:00 மணி முதல், தேர்வு எழுத மையங்களுக்குச் சென்ற மாணவர்கள் மத்தியில், குரூப்- 2 தேர்வுக்கான கேள்வித்தாள் வெளியாகி விட்டதாகவும், 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து சிலர் வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் பரவின.
இது குறித்து, தேர்வு மையத்தை ஆய்வு செய்த, கலெக்டர் சுரேஷ்குமாரிடம் கேட்ட போது, கேள்வித்தாள் மற்றும் விடைத்தாள்களை கொண்டு செல்ல, தாசில்தார்கள் தலைமையில் ஆறு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கேள்வித்தாள் வெளியானது என்பது வதந்தி, என்றார்.இந்நிலையில், 26 மையங்களிலிருந்தும், 1:00 மணிக்கு முன், எந்த மாணவர்களையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. கடலுார் பஸ் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த மாணவர்கள், மதியம், 1:30 மணியளவில், திருப்பாதிரிப்புலியூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே, குரூப் -2 தேர்வு முக்கிய வினாக்களுக்கான பதில்கள் அடங்கிய விடைத்தாள் ஜெராக்ஸ் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

Comments
Post a Comment