தமிழக சட்டப்பேரவை கூட்டம் அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து சட்டப்பேரவை குழுக்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
2014&2015ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 13ம் தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 4 நாள் பட்ஜெட் மீது விவாதம் நடத்தப்பட்டு சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
வழக்கமாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும், பட்ஜெட் மீதான பொது விவாதம் நடத்தப்பட்டு பதிலுரை முடிந்ததும், தொடர்ந்து துறை வாரியான மானிய கோரிக்கை பேரவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். இந்த கூட்டம் ஒரு மாதம் வரை நடைபெறும். ஆனால், நாடாளுமன்ற மக்களவை தேர்தலையொட்டி மானிய கோரிக்கை கூட்டம் நடத்தப்படவில்லை. தற்போது தேர்தல் முடிந்து, பிரதமர் பதவியேற்பு விழாவும் முடிந்ததையடுத்து ஜூன் மாதம் 2வது வாரத்தில் அதாவது 12 அல்லது 13ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டம் சுமார் ஒரு மாதம் நடைபெறும். அப்போது ஒவ்வொரு துறை வாரியான மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஜூன் 2வது வாரம் கூடுகிறது
பேரவை குழுக்கள் மாற்றி அமைப்பு
வழக்கமாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும், பட்ஜெட் மீதான பொது விவாதம் நடத்தப்பட்டு பதிலுரை முடிந்ததும், தொடர்ந்து துறை வாரியான மானிய கோரிக்கை பேரவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். இந்த கூட்டம் ஒரு மாதம் வரை நடைபெறும். ஆனால், நாடாளுமன்ற மக்களவை தேர்தலையொட்டி மானிய கோரிக்கை கூட்டம் நடத்தப்படவில்லை. தற்போது தேர்தல் முடிந்து, பிரதமர் பதவியேற்பு விழாவும் முடிந்ததையடுத்து ஜூன் மாதம் 2வது வாரத்தில் அதாவது 12 அல்லது 13ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டம் சுமார் ஒரு மாதம் நடைபெறும். அப்போது ஒவ்வொரு துறை வாரியான மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூன் மாதம் பேரவை கூட்டம் நடைபெற இருப்பதாலும், மந்திரிசபை மாற்றப்பட்டதாலும் சட்டப்பேரவை குழுக்கள் நியமன உறுப்பினர்களை மாற்றி அமைத்து பேரவைத்தலைவர் தனபால் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி சட்டமன்ற பேரவை அலுவல் ஆய்வு குழு உறுப்பினராக இருந்த கேபி.முனுசாமி நீக்கப்பட்டு, அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார். பொது கணக்கு குழு தலைவராக இருந்த எம்எல்ஏ பண்ருட்டி ராமச்சந்திரன் ராஜினாமா செய்ததையடுத்து, பார்வர்டு பிளாக் எம்எல்ஏ பி.வி.கதிரவன் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோன்று அரசு உறுதிமொழி குழு தலைவராக இருந்த ஆர்.பி.உதயகுமார் அமைச்சரானதையொட்டி, அப்பதவி எம்எல்ஏ ஏ.கே.போஸ் இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு செக்.! போலீஸ் ஓகே சொன்னால் தான் இனி வேலை.? வெளியான முக்கிய அறிவிப்பு தமிழக அரசுப் பணியில் சேரும் நபர்களுக்கு நேரடி சரிபார்ப்பு நடத்தப்படும். TNPSC மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் காவல்துறை இ-சேவை போர்டல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு தமிழக அரசு பணியில் இணைவது பெரும்பாலான இளைஞர்களின் கனவாக இருக்கும், இதற்காக இளைஞர்கள் இரவு பகலாக படிப்பார்கள். அந்த வகையில் தமிழக அரசு பணியில் பணியாளர்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி மூலமாக குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வில் தமிழக இளைஞர்கள் வெற்றி பெறுவதற்கு இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. ஒரே ஆண்டில் 75ஆயிரம் பேருக்கு அரசு வேலை மேலும் தமிழக அரசில் காலியாக உள்ள 75ஆயிரம் பணியிடங்கள் 2026ஆம் ஆண்டிற்குள் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் அவ்வப்போது தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகிவருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்த நபர்களில் ஒரு சிலர் போலியான சான்றிதழ் கொடுத்ததும், குற்ற வழக்குகள் இரு...
Comments
Post a Comment