பாரதீய ஜனதா கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கல்வி தொடர்பான சில முக்கிய அம்சங்கள்:
*கல்வித்திட்டம்,ஆசிரியர்களுக்கான ஊதிய விகிதம் ஆகியவை, ஆய்வு செய்யப்பட்டு, மாற்றி அமைக்கப்படும்
*தரமான கல்வி மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், அதிகளவில் ஏற்பட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்கள்
*பற்றாக்குறையை தீர்க்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்
*அனைவருக்கும் கல்வி திட்டம் - சர்வ சிக்ஷ அபியான்' திட்டத்தை ஆய்வு செய்யவும், அன்றாட தகவல்களை பதிவு செய்யவும் புதிய அமைப்பு உருவாக்கப்படும்.
மேலும், கல்வியறிவின்மையை முற்றிலும் ஒழிக்கும் விதமாக, அனைவருக்கும் கல்வித் திட்டம் விரிவுபடுத்துவதுடன், வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்
*இடைநிலை கல்வி, தனித்திறன் மேம்பாடு ஆகியவற்றை பரவலாக்கி, பள்ளிகள் வாயிலாக, கிராமப்புற, பழங்குடியின மற்றும் பிற சிக்கலான பகுதிகளில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்
பள்ளிக் கல்வித்திட்டம் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, நாட்டின் தேவைக்கேற்ப, ஆற்றல் வாய்ந்த, மன அழுத்தம் இல்லாத, கவர்ச்சியான திட்டமாக மாற்றி அமைக்கப்படும்
*பள்ளிக் கல்வியை தொடரவும், இறுதி செய்யவும், பெண் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்
*மாற்றுத் திறனாளிமாணவர்களுக்கு, சிறப்பு ஆசிரியர் திட்டம் ஏற்படுத்தப்படும்
*பள்ளிக் குழந்தைகளின் புத்தக சுமையை குறைக்கும் வகையில், தொழில்நுட்பம் சார் கல்விதிட்டம் ஏற்படுத்தப்படும்
*பள்ளியில் தேசிய மின்னணு- நூலகம் (இ - லைப்ரரி) ஏற்படுத்தப்படும்
*பள்ளி செல்லும் குழந்தைகளின் அறிவுஎல்லையை விரிவாக்கும் விதமாக, நாடுகளுக்கிடையிலான மாணவர்கள்பரிமாற்ற திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
*மாணவர்களின், கற்பனைத் திறன், அங்கீகரிக்கப்படுவதுடன், ஊக்குவிக்கப்படும்.
*மின்னணு நிர்வாகம்:
அகண்ட அலைவரிசை சேவையின் பயன்பாட்டை அதிகரிக்க, நடவடிக்கை எடுக்கப்படும்.
*ஒவ்வொரு கிராமத்திற்கும்இந்த சேவை கிடைக்க முக்கியத்துவம் அளிக்கப்படும்.
*கிராமப்புறங்களிலும், சிறு நகரங்களிலும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வேலைவாய்ப்புகள்அதிகரிக்கப்படும்.
*மாணவர்களுக்கு தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் எளிதில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
*பள்ளிகளில் பாடப் புத்தக சுமையை குறைக்க, தொழில் ரீதியான புதுமைகள் புகுத்தப்படும்.
*அனைத்து கல்வி நிறுவனங்களும், படிப்படியாக இந்த வசதிகளை பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
*கணினி மூலமான கல்வி மற்றும் பயிற்சிகள் விரிவுபடுத்தப்படும்.
கிராமப்புற மக்களுக்கு எளிதாக மருத்துவ வசதி கிடைக்க, நடமாடும் உடல்நல சேவைப் பிரிவு துவக்கப்படும்.
*அரசு ஆவணங்களை கணினி மயமாக்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு செக்.! போலீஸ் ஓகே சொன்னால் தான் இனி வேலை.? வெளியான முக்கிய அறிவிப்பு தமிழக அரசுப் பணியில் சேரும் நபர்களுக்கு நேரடி சரிபார்ப்பு நடத்தப்படும். TNPSC மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் காவல்துறை இ-சேவை போர்டல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு தமிழக அரசு பணியில் இணைவது பெரும்பாலான இளைஞர்களின் கனவாக இருக்கும், இதற்காக இளைஞர்கள் இரவு பகலாக படிப்பார்கள். அந்த வகையில் தமிழக அரசு பணியில் பணியாளர்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி மூலமாக குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வில் தமிழக இளைஞர்கள் வெற்றி பெறுவதற்கு இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. ஒரே ஆண்டில் 75ஆயிரம் பேருக்கு அரசு வேலை மேலும் தமிழக அரசில் காலியாக உள்ள 75ஆயிரம் பணியிடங்கள் 2026ஆம் ஆண்டிற்குள் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் அவ்வப்போது தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகிவருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்த நபர்களில் ஒரு சிலர் போலியான சான்றிதழ் கொடுத்ததும், குற்ற வழக்குகள் இரு...
Comments
Post a Comment