அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் கணினி பயிற்றுநர்களை நியமிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை கணினி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைக் கணினி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இரா. பரசுராமன் சென்னை பள்ளிக்கல்வி இயக்குநருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
மனு விவரம்: 1,880 கணினி பயிற்றுநர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு, 2-வது சிறப்பு தேர்வின் மூலம் தேர்ச்சிபெற்ற 140 கணினி பயிற்றுநர்களுக்கு பணிவரன்முறை செய்திட வேண்டும். பணிமூப்பு அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட 192 கணினி பயிற்றுநர்களையும் பணிவரன்முறை செய்திட வேண்டும்.
புதிதாக நியமனம் செய்யப்பட உள்ள கணினி பயிற்றுநர்களுக்கு முன்பாகவே இப்போது பணியாற்றும் கணினி பயிற்றுநர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்திட வேண்டும். 1,880 கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு பணி விதிகள் உருவாக்கிட வேண்டும். தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கிவரும் அனைத்து வகை மேல்நிலைப் பள்ளிகளுக்கும் புதிய கணினி பயிற்றுநர் பணியிடங்களை தோற்றுவிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு செக்.! போலீஸ் ஓகே சொன்னால் தான் இனி வேலை.? வெளியான முக்கிய அறிவிப்பு தமிழக அரசுப் பணியில் சேரும் நபர்களுக்கு நேரடி சரிபார்ப்பு நடத்தப்படும். TNPSC மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் காவல்துறை இ-சேவை போர்டல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு தமிழக அரசு பணியில் இணைவது பெரும்பாலான இளைஞர்களின் கனவாக இருக்கும், இதற்காக இளைஞர்கள் இரவு பகலாக படிப்பார்கள். அந்த வகையில் தமிழக அரசு பணியில் பணியாளர்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி மூலமாக குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வில் தமிழக இளைஞர்கள் வெற்றி பெறுவதற்கு இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. ஒரே ஆண்டில் 75ஆயிரம் பேருக்கு அரசு வேலை மேலும் தமிழக அரசில் காலியாக உள்ள 75ஆயிரம் பணியிடங்கள் 2026ஆம் ஆண்டிற்குள் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் அவ்வப்போது தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகிவருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்த நபர்களில் ஒரு சிலர் போலியான சான்றிதழ் கொடுத்ததும், குற்ற வழக்குகள் இரு...
சுயநலமிக்க தலைவா பரசுராமா, நீயெல்லாம் ஒரு தலைவனா? பாதிக்கப்பட்ட கணினி ஆசிரியர்களுக்காக ஒரு வார்த்தை கூட கோரிக்கை மனுவில் பேசவில்லை.64 மதிப்பெண் பெற்றுக் கொண்டு வெளியில் உள்ளோம். ஆனால் 63 மதிப்பெண் பெற்று வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு கவுன்சிங் கேட்கிறராய் வெட்கமாக இல்லை. சுயநலமாக சிந்திக்க தெரிந்தவன் தலைவனாக இருக்க தகுதியில்லை. காலம் பதில் சொல்லும்
ReplyDeleteசுயநலமிக்க தலைவா பரசுராமா, நீயெல்லாம் ஒரு தலைவனா? பாதிக்கப்பட்ட கணினி ஆசிரியர்களுக்காக ஒரு வார்த்தை கூட கோரிக்கை மனுவில் பேசவில்லை.64 மதிப்பெண் பெற்றுக் கொண்டு வெளியில் உள்ளோம். ஆனால் 63 மதிப்பெண் பெற்று வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு கவுன்சிங் கேட்கிறராய் வெட்கமாக இல்லை. சுயநலமாக சிந்திக்க தெரிந்தவன் தலைவனாக இருக்க தகுதியில்லை. காலம் பதில் சொல்லும்
ReplyDelete