உதவி பேராசிரியர் பணி நியமனம்: அரசாணை வெளியிட கோரிக்கை --- தின மலர் நாளேடு "உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ள, பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிக் காலத்திற்கும், மதிப்பெண் வழங்க வேண்டும்' என, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. அதன் நிர்வாகிகள், உயர்கல்வித்துறை செயலரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு, தகுதி வாய்ந்தவர்கள் பணி நியமனம் செய்யப்படுகின்றனர். அதற்கான தகுதிகளாக, யு.ஜி.சி., "நெட், ஸ்லெட்' தேர்ச்சி மற்றும் பி.எச்.டி., பட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஏதேனும் கல்லூரிகளில் பணிபுரிந்து வந்தால், அப்பணிக் காலத்திற்கு, ஆண்டுக்கு, இரண்டு மதிப்பெண் வீதம், 15 மதிப்பெண் வழங்கப்படுகிறது. பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், கல்லூரி உதவிப் பேராசிரியர் தகுதியான, யு.ஜி.சி., "நெட், ஸ்லெட்' மற்றும் பி.எச்.டி., போன்றவற்றை முடித்துள்ளனர். ஆனால், அவர்களால், உதவிப் பேராசிரியர் பணிக்கு, செல்ல முடியவில்லை. ஏனெனில், அவர்களின் பணிக்காலம், கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுவதில்லை. எனவே, அவர்கள் உதவிப் பேராசிரியர் பணிக்கு, தகுதி பெற்ற காலம் முதல், அவர்களின் பணிக்காலத்திற்கு, ஆண்டுக்கு, இரண்டு மதிப்பெண் வழங்க வேண்டும். இதற்கான தனி அரசாணையை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே கோரிக்கையை வலியுறுத்தி, தமிழக தமிழாசிரியர் கழகம் சார்பிலும், மனு கொடுக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog