தற்காலிக ஆசிரியர்கள் பணி மீண்டும் 5ஆண்டுகள் நீட்டிப்பு
அரசு பள்ளிகளில் பணி யாற்றும் தற்காலிக பட்ட தாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை, மேலும் 5 ஆண்டுகளுக்கு, பணி நீட்டிப்பு செய்ய, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் , 2008 – 09, 2009 – 10 ஆகிய கல்வி ஆண்டுகளில், தரம் உயர்ந்த உயர், மேல் நிலை பள்ளிகளுக்கு தற்காலிக ஆசிரியர்கள் 790 பேர் நியமிக்கப்பட்டனர் . இவர்களுக்கு, 2013 டிச., வரை பணியை அரசு நீட்டித்திருந்தது. 2014 ஜன., முதல் மேலும் 5 ஆண்டுகளுக்கு, தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்குவது குறித்த கருத்துரு, அரசுக்கு அனுப்பப்பட்டு, பரிசீலனையில் உள்ளது. பள்ளி கல்வி இயக்குனர் மூலம், ஏற்கனேவ கடந்த ஜனவரி முதல் மார்ச் வரை சம்பளம் வழங்க, உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், அவர்களுக்குரிய பணி நீட்டிப்பு, காலதாமதமாவதால், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான சம்பளத்தை வழங்க, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளில் கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு விடியல் கிடைக்குமா??? கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களின் கோரிக்கை கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து அதிமுக ஆட்சியால் பழி வாங்கப்பட்ட எங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விடியல் தருவாரா??? NCTE norms, நிலுவையில் உள்ள காலி பணியிடம் அதிமுக அரசு மூடி மறைத்து விட்டது இதை முதல்வர் ஸ்டாலின் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பாதிக்கப்பட்ட எங்களுக்கு வேலை கொடுப்பாரா??? தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயம் என்று NCTE அறிவித்தது. 15-11-2011 அன்று அதிமுக அரசு நடைமுறை படுத்தியது. அந்த NCTE அறிக்கையில் clause v விதிப்படி 23-08-2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து இருந்தால் அல்லது விளம்பரம் வெளியிடப்பட்டு இருந்தால் அல்லது பணி நியமன வேலைகள் தொடங்கி இருந்தால் டெட் தேர்வு தேவை இல்லை என்று அறிவித்து உள்ளது. இந்த அறிக்கை 11 ஆண்டுகள் கழித்து தான் 2022 ஆம் ஆண்டு திமுக அரச...
Comments
Post a Comment