முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியல் ரிலீஸ் எப்போது: தேர்வர்கள் ஆவேசம் -தினமலர் நாளேடு
முதுகலை ஆசிரியர்கள் தேர்வு பட்டியல் வெளியாவதில் ஏற்படும் கால தாமதத்தை கண்டித்து, தேர்வர்கள் நேற்று, ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அரசு உத்தரவு : அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, அரசு உத்தரவிட்டது. இதில், தமிழ் ஆசிரியர் பணியிடங்களுக்கு மட்டும், இறுதி பட்டியல் வெளியிடப்பட்டு, பணி நியமனமும் நடந்துள்ளது. 600க்கும் அதிகமான தமிழ் ஆசிரியர்கள், பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டு, மூன்று மாதங்களுக்கு மேலாகிறது. ஆனால், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணிதம் உள்ளிட்ட, பல முக்கிய பாடங்களுக்கு இறுதி தேர்வு பட்டியலை, டி.ஆர்.பி., இன்னும் வெளியிடவில்லை.
இதைக் கண்டித்து, முதுகலை தேர்வர்கள், நேற்று காலை, சென்னையில் உள்ள, டி.ஆர்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தேர்வர்கள், மேற்கண்ட பாடங்களுக்கு, இறுதி தேர்வு பட்டியலை, உடனடியாக வெளியிட வலியுறுத்தினர்.
பணி நியமனம் : இதுகுறித்து, தேர்வர்கள் கூறியதாவது: ஒரே போட்டித் தேர்வில், குறிப்பிட்ட பாடத்தை சேர்ந்தவர்கள் மட்டும், பணி நியமனம் பெற்று உள்ளனர். எங்களுக்கு இன்னும், தேர்வு இறுதி பட்டியலையே வெளியிடாமல் இருப்பது, வேதனை அளிக்கிறது. டி.ஆர்.பி., அதிகாரிகளிடம் கேட்டபோது, "சென்னை, உயர்நீதிமன்றத்தில், 25 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவை முடிவுக்கு வந்த பிறகே, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடியும்' என, தெரிவித்தனர். ஆனால், எங்களுக்கு தெரிந்து, வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை. வேண்டுமென்றே, டி.ஆர்.பி., இழுத்தடிப்பு வேலையை செய்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. தமிழக அரசு, இந்த பிரச்னையை உடனடியாக தீர்க்க, முன்வர வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு செக்.! போலீஸ் ஓகே சொன்னால் தான் இனி வேலை.? வெளியான முக்கிய அறிவிப்பு தமிழக அரசுப் பணியில் சேரும் நபர்களுக்கு நேரடி சரிபார்ப்பு நடத்தப்படும். TNPSC மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் காவல்துறை இ-சேவை போர்டல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு தமிழக அரசு பணியில் இணைவது பெரும்பாலான இளைஞர்களின் கனவாக இருக்கும், இதற்காக இளைஞர்கள் இரவு பகலாக படிப்பார்கள். அந்த வகையில் தமிழக அரசு பணியில் பணியாளர்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி மூலமாக குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வில் தமிழக இளைஞர்கள் வெற்றி பெறுவதற்கு இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. ஒரே ஆண்டில் 75ஆயிரம் பேருக்கு அரசு வேலை மேலும் தமிழக அரசில் காலியாக உள்ள 75ஆயிரம் பணியிடங்கள் 2026ஆம் ஆண்டிற்குள் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் அவ்வப்போது தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகிவருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்த நபர்களில் ஒரு சிலர் போலியான சான்றிதழ் கொடுத்ததும், குற்ற வழக்குகள் இரு...
Comments
Post a Comment