குரூப் - 4 கலந்தாய்வுக்கு 6,000 பேருக்கு அழைப்பு
கலந்தாய்வுக்கு 6,000 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். 3,000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் இதன்மூலம் நிரப்பப்படவுள்ளன.
தமிழ்நாடு தேர்வாணையத்தின் அறிவிப்பு: இளநிலை உதவியாளர், நில அளவர் உள்ளிட்ட பணியிடங்களில் 3,288 பேரை நியமிக்க கடந்த 1ம் தேதி முதல் டி.என்.பி.எஸ்.சி.யில் கலந்தாய்வு நடந்து வருகிறது. இதற்கு 6,000 பேர் அழைக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து மே 8ம் தேதி வரை கலந்தாய்வு நடக்கும். தகுதி வாய்ந்தவர்களுக்கு அழைப்பு கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளன.
இதன் விவரங்களை தேர்வாணைய இணையதளத்தில் ( www.tnpsc.gov.in) பார்க்கலாம். இவ்வாறு தேர்வாணையம் அறிவித்து உள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வின் முடிவுகள், நீண்ட இழுபறிக்கு பின்னர், 2014ம் ஆண்டு மார்ச் மாதம் 5ம் தேதி வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தேர்வை, மொத்தம் 12 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதியிருந்தனர். குறைந்தபட்சம் 90 மதிப்பெண்கள் எடுத்திருந்தால் அது தேர்ச்சி மதிப்பெண்களாக கருதப்படும்.
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு செக்.! போலீஸ் ஓகே சொன்னால் தான் இனி வேலை.? வெளியான முக்கிய அறிவிப்பு தமிழக அரசுப் பணியில் சேரும் நபர்களுக்கு நேரடி சரிபார்ப்பு நடத்தப்படும். TNPSC மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் காவல்துறை இ-சேவை போர்டல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு தமிழக அரசு பணியில் இணைவது பெரும்பாலான இளைஞர்களின் கனவாக இருக்கும், இதற்காக இளைஞர்கள் இரவு பகலாக படிப்பார்கள். அந்த வகையில் தமிழக அரசு பணியில் பணியாளர்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி மூலமாக குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வில் தமிழக இளைஞர்கள் வெற்றி பெறுவதற்கு இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. ஒரே ஆண்டில் 75ஆயிரம் பேருக்கு அரசு வேலை மேலும் தமிழக அரசில் காலியாக உள்ள 75ஆயிரம் பணியிடங்கள் 2026ஆம் ஆண்டிற்குள் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் அவ்வப்போது தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகிவருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்த நபர்களில் ஒரு சிலர் போலியான சான்றிதழ் கொடுத்ததும், குற்ற வழக்குகள் இரு...
Comments
Post a Comment