கவனத்திற்குள் வராத கணிதத் தேர்வும்-ஒட்டு மொத்த கணித ஆசிரியர்களின் ஆதங்கமும்: 

தமிழகத்தில் இன்றுடன் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவடைந்தது.மடைதிறந்த வெள்ளம் போல் மாணாக்கர்கள் தேர்வு முடிந்தவுடன் மகிழ்ச்சி வெள்ளத்தில் தேர்வறையை விட்டு வெளியேறினர்.தன்னுடைய இளமை காலத்தில் சந்திக்கும் முதல் பொதுத்தேர்வு என்பதால் சற்று பதற்றத்துடனும் பயத்துடனும் தேர்வை சந்தித்தனர். 

அனைத்துப் பாடங்களும் எளிமையாகவும் புத்தகத்தில் உள்ள கேள்விகள் மட்டும் கேட்கப்பட்டது.(கணிதத்தைத் தவிர) கணித பாடத்தில் வழக்கமான கேள்விகளான இயற்கணித பாடத்தில் இருந்து வர்க்கமூலம்.காரணிப்படுத்துதல் மற்றும் கணங்களில்-சார்புகளில் இருந்து அம்புக்குறிபடம்கேட்கப்படவில்லை.இதனால் 15 மதிப்பெண்கள் பெறுவது கிராமப்புற மாணவர்களுக்கு சற்று சிரமத்தை ஏற்படுத்தியது.


தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு படித்த பெற்றோர்கள் கவனமுடன் தன் பிள்ளைகளை கவனிக்கின்றனர் மற்றும் ,அரசின் விதிகளுக்கு உட்படாத பயிற்சி வகுப்புகள். ஆனால் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணாக்கர்களில் 75%பெற்றோர்கள் வறுமையின் காரணமாக இடம் பெயர்ந்து வெளியூரில் கூலி வேலை பார்க்கின்றனர் இவர்களை கவனிப்பதற்கு ஆள் இல்லாத பட்சத்தில்,உணவுகூட அருந்தாமல் பள்ளிக்கு வருகின்றனர் . இவர்களை எத்தனையோ இடையூறுகளுக்கு மத்தியில் நாங்கள் பாடம் நடத்துகின்றோம்.


சென்டம் எடுப்பதற்கு ஒவ்வொரு கணித ஆசிரியரும் போராடுகின்றோம்.ஆனால் தற்பொழுது நடந்து முடிந்த கணிதத் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்கள் சென்டம் பெறுவதில் சற்று சிக்கல் ஏற்பட்டுள்ளது.சென்ற ஆண்டும் அனைத்து பாடங்களும் எளிமையாக இருந்தது ஆனால் கணிதத்தில் வரையறுக்கப்பட்ட கேள்வித் தொகுப்பில் (Blueprint)ன் படி கேள்விகள் இல்லை ஆகையால் 10மதிப்பெண்கள் தரப்பட்டது.இந்தஆண்டு (Blueprint)ன் படி எடுக்கப்பட்டது 


ஆனால் எதிர்பார்த்த கேள்விகள் 5மதிப்பெண் வினாக்களில் இடம் பெறவில்லை.உதரணமாக ஒரு மாணவன் அனைத்து பாடங்களிலும் 90க்கு அதிகமான மதிப்பெண்கள் பெறுகின்றான் கணிதத்தில் மட்டும் 60 மதிப்பெண்கள் பெற்றால் அங்கு கணித ஆசிரியர் குற்றவாளியாக நிற்கின்றார். பொதுமக்களிடம் கேள்வித்தாளின் கடினத் தன்மையை எடுத்துக்கூறினாலும் அதனை கேட்பதற்கு அவர்கள் தயாராக இல்லை.


 இது போன்ற கேள்வித்தாள் கணிதத்தில் கண்டிப்பாக தேவையான ஒன்றுதான் இருந்த போதிலும் மற்ற பாடங்களை பார்க்கும்பொழுது.கணித ஆசிரியர் எவ்வளவு உழைத்தும் பொதுமக்களிடம் நன்மதிப்பை பெறுவது சற்று கடினமான செயலாக உள்ளது.


ஒட்டுமொத்தமாக கணித ஆசிரியர்களின் ஆதங்கம் என்னவென்றால் கடினமான கேள்வித்தாள்கள்இன்றைய மாணவர்களுக்கு கண்டிப்பாக தேவை ஆனால் அது அனைத்து பாடங்களுக்கும் பொருந்த வேண்டும்.வருங்காலத்திலாவது இதுபோன்ற நிகழ்வுகள் மாற்றியமைக்கப்படவேண்டும் என்பது ஒட்டு மொத்த கணித ஆசிரியர்களின் ஆவல்....

Comments

Popular posts from this blog