TNTET - ஏப்ரல் 7 முதல் டி.இ.டி., - 2 சான்றிதழ் சரிபார்ப்பு

சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஏப்., 7 முதல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கவுள்ளது. டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி மதிப்பெண் அளவை, 60 சதவீதத்தில் இருந்து, 55 சதவீதமாக குறைத்து, கடந்த மாதம், முதல்வர் அறிவித்தார்.

இந்த சலுகை, கடந்த ஆண்டு, ஆகஸ்டில் நடந்த டி.இ.டி., தேர்வுக்கு பொருந்தும் எனவும் தெரிவித்தார். அதன்படி, டி.இ.டி., முதல் தாளில் (இடைநிலை ஆசிரியர்), தேர்ச்சி பெற்ற, 20 ஆயிரம் பேருக்கு, கடந்த, 12ம் தேதி முதல், ஐந்து மண்டலங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து வருகிறது. இந்தப் பணி, 31ம் தேதியுடன் முடிகிறது. 

இதையடுத்து, டி.இ.டி., இரண்டாம் தாளில் (பட்டதாரி ஆசிரியர்) தேர்ச்சி பெற்ற, 27 ஆயிரம் பேருக்கு, ஏப்., 7 முதல், 25ம் தேதி வரை, சான்றிதழ் சரிபார்ப்பு பணியை நடத்த, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) முடிவு செய்துள்ளது. முதல் தாளுக்கு நடந்ததைப் போல், ஐந்து மண்டலங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கும் என, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்துள்ளது.

Comments

  1. அனைவரின் கவனத்திற்கு ,
    2013 டெட் விளைவுகள் :
    1. அப்ளிகேஸன் காஸ்ட் 500₹
    2. ஹால் டிக்கெட், கால் லெட்டர், பிரின்ட் அவுட், அட்டஸ்டட், ஜெராக்‌ஸ். ஃபோட்டோ, காண்டெக்ட் சர்ட்டிஃபிகேட். ட்ராவல் எக்ஸ்பென்ஸ் தோராயமாக 500₹
    3. 7 மாத வேலை கெடுத்து முயன்றது. குறைந்த அளவு மாதம் 5000₹ * 7 = 35000₹
    4. தினசரி செய்திதாள்135 * 7=945₹
    5. மாதம் இனைய செலவு 130*7=910₹
    இதுவரை ஓரளவு மதிப்பிட்டோம்.
    இனி
    7. வீட்டில் என்னப்பா இன்னும் வேலை வரலியா?
    8. நடுராத்திரியில் ஃபைனல் லிஸ்ட் விடுவாங்க னு தினமும் உறக்கம் போனது ?
    9. கேஸ் போட்ட அன்பர்களின் வாய்தா வில் சொத்தில் மிச்சம் இருந்தால் மீன்டும் வாய்தா.
    10. கேஸ் போடாத அன்பர்களின் லட்சோப லட்சம் கேள்விகள் .
    11. சிவி முடித்ததால் வேலை இழந்த அன்பர்கள்
    12. தினசரி செய்திதாள்களின் வியாபார யுக்திகளால் விரக்தி
    13. இன்றைய கேஸ் நிலை என்ன என்ற நிலை தினமும்
    14. எல்லாவற்றையும் விட சிவி முடித்து பின்னர் 5%ரிலேக்ஸேஸன் உண்ண கொடுத்து கையில் கொடுத்த பழத்தில் தோலை உரித்த பின் பங்கு கேட்ட மன உளைச்சல்
    14. தேர்தல் விதிமுறை என்று காரனம் காட்டுவது
    15. பேஷன்டே இறந்தாலும் ஆபரேஷன் முடியுமா முடியாதா என்ற நிலை

    ReplyDelete
  2. Maths TET CV attended candidiates visit TNTETMATHS.BLOGSPOT.IN to know your current position.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog