TET தேர்வில் வேலை வாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்க கோருதல் தொடர்பாக - Request Letter 

பெறுநர்
 மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள்
தலைமைச் செயலகம்,
சென்னை.

பொருள்: முதுகலை ஆசிரியர் நியமனத்தில் வழங்கப்படுவதுபோல் 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் வேலை வாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்க கோருதல் தொடர்பாக.

 மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு வணக்கம். ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை அளித்த இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு கோடான கோடி நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். 2013 ல் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தாள் 1, தாள் 2ல் ஆயிரக்கணக்கானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு வெயிட்டேஜ் முறையில் மதிப்பெண் வழங்க்ப்பட்டு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இடைநிலை ஆசிரியர்களுக்கான தாள் 1 ஐ பொருத்தவரையில் வேலை வாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில்தான் பணி நியமனம் இருக்கும் என தேர்வர்கள் எதிர்பார்த்து இருந்தனர். தேர்வு முடிவுகள் வெளியானதும் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மூலம் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டது.

இடைநிலை ஆசிரியர் பதவிகளுக்கான தாள் 1ல் தேர்வானோர் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சென்று தங்களது பதிவு மூப்பை சரிபார்த்துக்கொள்ளவேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதன்படி தேர்வர்கள் தங்களது பதிவு மூப்பை சரிபார்த்துக்கொண்டனர். இந்நிலையில் சான்றிதழ் சரிபார்ப்பின்போது வேலைவாய்ப்பக பதிவு மூப்பு தேதி கோரப்படாதது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்ய இயலாத நிலையில் நாங்கள் உள்ளோம். இதனால் அரசு வேலை கிடைக்கும் என நம்பியிருந்த வயது முதிர்ந்த பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முதுகலை ஆசிரியர் தேர்வில் வேலைவாய்ப்பக பதிவு மூப்புக்கு கௌரவம் அளிக்கும் வகையில் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின்னர் இந்த வெயிட்டேஜ் மதிப்பெண்கள் சேர்க்கப்பட்டு தேர்வுப் பட்டியல் தயார் செய்யப்படுகிறது. வேலைவாய்ப்பக பதிவு மூப்பு ஒரு ஆண்டுக்குள் வெயிட்டேஜ் மதிப்பெண் கிடையாது.

1 முதல் 3 ஆண்டுகள் வரை1 மதிப்பெண்ணும் 3 முதல் 5ஆண்டுகள் வரை 2 மதிப்பெண்ணும் 5 முதல் 10 ஆண்டுகள் வரை 3மதிப்பெண்ணும் 10 ஆண்டுகளுக்கு மேல் 4 மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது. அதுபோல் 2013ல் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வான தாள் 1எழுதி வெற்றிபெற்ற தேர்வர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வான தாள் 2 எழுதி வெற்றி பெற்றவர்களுக்கும் அவர்களது வேலை வாய்ப்ப்க பதிவு மூப்பு அடிப்படையில் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் அளித்து தேர்வுப் பட்டியல் தயார் செய்து வெளியிட்டு உதவுமாறு மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்பாதம் வணங்கி கேட்டுக்கொள்கிறோம்.

இதன் மூலம் ஆசிரியர் தகுதி்த் தேர்வில் தேர்ச்சி பெற்ற வயது முதிர்ந்த பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானோருக்கு வாழ்வில் ஒளியேற்றும் மாண்புமிகு அம்மா அவர்களுக்கு என்றென்றும் நாங்கள் நன்றிக்கடன் பட்டவர்களாக இருப்போம் அம்மா.

Comments

Popular posts from this blog