ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய மாணவர்கள் டி.ஆர்.பி., முன் ஆர்ப்பாட்டம்.
இன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் முன் சுமார் 150க்கும் மேற்பட்டஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் குவிந்தனர். அவர்கள் 5% மதிப்பெண் தளர்த்தி வழங்கிய அரசாணையை இரத்து செய்ய கோரிக்கை வைத்தனர்.
காலை 10.30மணிக்கு அவர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டது, ஆனால் அவர்கள் கலைந்து செல்லவில்லை.இதையடுத்து உடனடியாக அவர்களை வெளியேற்ற 2வேன்கள் நிறைய போலீஸ் குவிக்கப்பட்டனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலோனர் டி.இ.டி., தேர்வில் தேர்ச்சியடைந்தவர்கள். அதேபோல் ஏற்கனவே சான்றிதழ் சரிப்பார்ப்பு முடித்தவர்களை முதலில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்றும் 5% மதிப்பெண் தளர்வு அரசாணையை இரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. அப்பொழுது டி.ஆர்.பி., சார்பில் அரசாணை இரத்து செய்யும் அதிகாரம் எங்களுக்கு இல்லை என்று கூறிவிட்டது.
Thanks to www.kalvisaithi.com
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு செக்.! போலீஸ் ஓகே சொன்னால் தான் இனி வேலை.? வெளியான முக்கிய அறிவிப்பு தமிழக அரசுப் பணியில் சேரும் நபர்களுக்கு நேரடி சரிபார்ப்பு நடத்தப்படும். TNPSC மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் காவல்துறை இ-சேவை போர்டல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு தமிழக அரசு பணியில் இணைவது பெரும்பாலான இளைஞர்களின் கனவாக இருக்கும், இதற்காக இளைஞர்கள் இரவு பகலாக படிப்பார்கள். அந்த வகையில் தமிழக அரசு பணியில் பணியாளர்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி மூலமாக குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வில் தமிழக இளைஞர்கள் வெற்றி பெறுவதற்கு இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. ஒரே ஆண்டில் 75ஆயிரம் பேருக்கு அரசு வேலை மேலும் தமிழக அரசில் காலியாக உள்ள 75ஆயிரம் பணியிடங்கள் 2026ஆம் ஆண்டிற்குள் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் அவ்வப்போது தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகிவருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்த நபர்களில் ஒரு சிலர் போலியான சான்றிதழ் கொடுத்ததும், குற்ற வழக்குகள் இரு...
Comments
Post a Comment