தகுதித்தேர்வு மதிப்பெண் சலுகையை ரத்து செய்ய வழக்கு -- தின மலர் நாளேடு

அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைக்கும் வகையில், தகுதி தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் மேற்க்கொள்ள வேண்டும். மதிப்பெண் சலுகை வழங்க கூடாது. சலுகை வழங்கிய அரசின் உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும்' என தாக்கல் ஆன வழக்கில், அரசுக்கு நோட்டிஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. 

மதுரை மாவட்டம் பாலமேடு கண்ணன் உட்பட, நான்கு பேர் தாக்கல் செய்த மனு: தகுதி தேர்வில்(டி.இ.டி) வெற்றி பெற்றவர்களை ஆசிரியர்களாக அரசு நியமிக்கிறது. இதன்படி இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய தகுதிகள் நிர்ணயித்து ஆசிரிய தேர்வு வாரிய (டி.ஆர்.பி)தலைவர் 2012ல் அறிவிப்பு வெளியிட்டார். 

அதில் டி.இ.டி தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பின் போது, பிளஸ் 2 பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் சலுகை வழங்கப்படும்.பின் பணி நியமனம் மேற்க்கொள்ளப்படும். என உள்ளது. ஒவ்வொருவரும் பல்வேறு கால கட்டங்களில் பிளஸ் 2 பட்டம் படித்து வெளியேறுகின்றனர். 

இதனால் மதிப்பெண்ணில் அதிகம், குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பிளஸ் 2, பட்டப்படிப்பிற்கு சலுகை வழங்குவதால் டி.இ.டில் அதிகம் மதிப்பெண் பெற்றவர்களுக்கு வாய்ப்பு குறைகிறது. இட ஒதுக்கீடு பின்பற்றபடுகிறதா என தெரிவதில்லை.நியமனத்தில் வெளிப்படை தன்மை இல்லை. 

அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைக்கும் வகையில், தகுதி தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் மேற்க்கொள்ள வேண்டும். மதிப்பெண் சலுகை வழங்க கூடாது. சலுகை வழங்கிய அரசின் உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும்' இவ்வாறு, அவர் குறிப்பிட்டார் நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன், மனு விசாரணைக்கு வந்தது. 

மனுதாரர் சார்பில் மூத்த வக்கில் அஜ்மல்கான் ஆஜரானார். பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர், டி.ஆர்.பி., தலைவருக்கு நோட்டிஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி 'பணிநியமனம் இவ்வழக்கின் இறுதி தீர்ப்பைப் பொறுத்து அமையும்' என்றார்.

Comments

Popular posts from this blog