ஆசிரியர் தகுதிதேர்வு இட ஒதுக்கீட்டை அழிக்கும் தமிழக அரசு? அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு.
தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் 15000 ஆனால் அறிவித்த காலிப்பணியிடம் 13000 .தேர்ச்சி பெற்ற ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் 12000 ஆனால் அறிவித்த காலிப்பணியிடம்
2000.பின்னர் சான்றிதழ் சரிபார்பிற்க்கு 27000 பேரையும் அலைய வைக்க வேண்டிய அவசியம் என்ன ?
* முதலில் TRB சார்பில் அரசு விளம்பரம் வெளியிட வேண்டும். இடஒதுக்கீட்டின் அடிப்படையில்,.
* அதன் பிறகு TET இல் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்..
* விண்ணப்பித்தவர்களிடம் இருந்து தகுதியான நபர்களுக்கு சான்றிதழ் சரிபார்பிற்க்கான அழைப்பிதழ் கடிதம் அனுப்பிவைக்கப்படும்..
* சான்றிதழ் சரிபார்த்து முடிந்தபிறகு இறுதி பட்டியலுக்காக காத்திருக்கவேண்டும்..
* இறுதி பட்டியல் வந்த உடன் தங்களுக்கு உரிய பள்ளியை தேர்வு செய்ய கலந்தாய்வுக்கு சென்று பணி ஆணை வாங்கிய பிறகு தான் பணியில் சேர முடியும்..
* முறையான இட ஒதுக்கீட்டு முறை கடைப்பிடிக்கப்பட்டால் மேலே சொன்ன வழி முறைகளின் படி நடந்தால் மட்டுமே சாத்தியம்..
ஆனால் தேர்தலை மனதில் கொண்டு தமிழக அரசு அவசர அவசரமாக தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் 15000 பேரையும், ஆசிரியர் பயிற்சி முடித்து தேர்ச்சி பெற்ற 12000 பேரையும் சான்றிதழ் சரிபார்பிற்க்காக அழைத்துள்ளது..
இது இட ஒதுக்கீட்டிற்கு எதிராக அமைந்துள்ளது,முறையான இட ஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கபடாவிட்டால் முதல் கட்டமாக போராட்டம் நடத்தப்படும், அடுத்தகட்டமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துபணி நியமனத்திற்கு தடை கேட்டு வழக்கு தொடரப்படும் என்று அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது...
அரசு சொன்ன எண்ணிக்கையின் அடிப்படையில் கீழ்கண்டவாறு பணி நியமனம் இருக்கவேண்டும் இருக்குமா ?.சமூக நீதியை வேரறுத்து இட ஒதுகீட்டையே காலி செய்ய நினைக்கின்றது தமிழக அரசு என்ற எண்ணம் மக்களிடம் வேருன்ற தொடங்கிவிட்டது?..இதன் பலனை வரும் தேர்தலிலே சந்திக்க வேண்டி இருக்குமா?
முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளில் கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு விடியல் கிடைக்குமா??? கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களின் கோரிக்கை கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து அதிமுக ஆட்சியால் பழி வாங்கப்பட்ட எங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விடியல் தருவாரா??? NCTE norms, நிலுவையில் உள்ள காலி பணியிடம் அதிமுக அரசு மூடி மறைத்து விட்டது இதை முதல்வர் ஸ்டாலின் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பாதிக்கப்பட்ட எங்களுக்கு வேலை கொடுப்பாரா??? தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயம் என்று NCTE அறிவித்தது. 15-11-2011 அன்று அதிமுக அரசு நடைமுறை படுத்தியது. அந்த NCTE அறிக்கையில் clause v விதிப்படி 23-08-2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து இருந்தால் அல்லது விளம்பரம் வெளியிடப்பட்டு இருந்தால் அல்லது பணி நியமன வேலைகள் தொடங்கி இருந்தால் டெட் தேர்வு தேவை இல்லை என்று அறிவித்து உள்ளது. இந்த அறிக்கை 11 ஆண்டுகள் கழித்து தான் 2022 ஆம் ஆண்டு திமுக அரச...
Comments
Post a Comment