ஆசிரியர் நியமன தேர்வு மதிப்பெண் தவறான தகவல் அளித்தவர் மனு தள்ளுபடி. முதுகலை ஆசிரியர் நியமன தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற தவறான தகவல் அளித்தவர் மனுவை மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. புதுக்கோட்டை, மணல்மேல்குடி சுவர்ணகுமார் தாக்கல் செய்த மனு: ஆசிரியர் தேர்வு வாரியம்(டி.ஆர்.பி) மூலம் 2012 - 2013 ல் நடந்த முதுகலை இயற்பியல் ஆசிரியர் நியமன தேர்வில் பங்கேற்றேன். மொத்தம் 150க்கு 102 'கட் ஆப்' நிர்ண்யிக்கப்பட்டது. எனக்கு 101 மதிப்பெண் கிடைத்தது. விடைத்தாள் நகலை சரிப்பார்த்தேன்.வினா 115க்கு சரியான விடை அளித்துள்ளேன். அதற்க்கு 1 மதிப்பெண் கூடுதலாக வழங்கி சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். ஒரு பணியிடத்தை காலியாக வைத்திருந்து, என்னை நியமிக்க டி.ஆர்.பி க்கு உத்திரவிட வேண்டும் என குறிப்பிட்டார்.அரசு வழக்கறிஞர்நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன், விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் சண்முகநாதன் ஆஜராகி மனுதாரரின் அசல் விடைத்தாள் நகலை சமர்ப்பித்தார். நீதிபதி:மனுதாரர் 115வது வினாவிற்கு 'சி' என பதில் அளித்துள்ளார். கூடுதல் மதிப்பெண்: ஆனால் 'பி' தான் சரியான விடை; அதை விடையாக எழுதியுள்ளேன்; அதனடிப்படையில் கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும் என மனு செய்துள்ளார். கோர்டிற்க்கு தவறான தகவல் அளித்துள்ளார். மனுதள்ளுபடி செய்யப்படுகிறது என்றார்

Comments

Popular posts from this blog