மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: 8 லட்சம் பேர் எழுதினர்
சி.பி.எஸ்.இ. நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை நாடு முழுவதும் 8 லட்சம் பேர் ஞாயிற்றுக்கிழமை எழுதினர். இத்தேர்வு முடிவுகள் மார்ச் 21-ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.
1 முதல் 5-ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் இடைநிலை ஆசிரியர்கள் முதல் தாளையும், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் இரண்டாம் தாளையும் எழுத வேண்டும். இத்தேர்வில் தேர்ச்சி பெற 150-க்கு 90 மதிப்பெண் எடுக்க வேண்டும். தேர்வில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரும் விதத்தில் தேர்வர்களின் ஓ.எம்.ஆர். விடைத்தாள்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். தேர்வர்கள் மொழிப் பாடங்கள், கணிதம், அறிவியல் அல்லது சமூக அறிவியல் இவற்றில் தேர்வு எழுதிய பாடங்களின் விவரங்களில் பிழைகள் இருந்தால் திருத்திக்கொள்ள திங்கள்கிழமை மாலைக்குள் (மார்ச் 17) சி.பி.எஸ்.இ. அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லலாம்.
இத்தேர்வுக்கான சரியான விடைகளும் சி.பி.எஸ்.இ. இணையதளத்தில் வெளியிடப்படும். அதில் ஏதேனும் ஆட்சேபணை இருந்தால் மார்ச் 19-ஆம் தேதிக்குள் சி.பி.எஸ்.இ. அமைப்பிடம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய இ.மெயில் முகவரி: ctet@ cbse.gov.in
முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளில் கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு விடியல் கிடைக்குமா??? கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களின் கோரிக்கை கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து அதிமுக ஆட்சியால் பழி வாங்கப்பட்ட எங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விடியல் தருவாரா??? NCTE norms, நிலுவையில் உள்ள காலி பணியிடம் அதிமுக அரசு மூடி மறைத்து விட்டது இதை முதல்வர் ஸ்டாலின் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பாதிக்கப்பட்ட எங்களுக்கு வேலை கொடுப்பாரா??? தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயம் என்று NCTE அறிவித்தது. 15-11-2011 அன்று அதிமுக அரசு நடைமுறை படுத்தியது. அந்த NCTE அறிக்கையில் clause v விதிப்படி 23-08-2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து இருந்தால் அல்லது விளம்பரம் வெளியிடப்பட்டு இருந்தால் அல்லது பணி நியமன வேலைகள் தொடங்கி இருந்தால் டெட் தேர்வு தேவை இல்லை என்று அறிவித்து உள்ளது. இந்த அறிக்கை 11 ஆண்டுகள் கழித்து தான் 2022 ஆம் ஆண்டு திமுக அரசு நடைமுறைக்கு கொண்டு வந்து உள்ளது. 10 ஆ
Comments
Post a Comment