தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பிப்.26 ல் "ஸ்டிரைக்' : 60 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்பு 

இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வலியுறுத்தி, பிப்.,26 ல் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட, தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு செய்துள்ளது. 

தொடக்க கல்வித்துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் வழங்குதல்; புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை, அரசு நிறைவேற்றாவிடில், போராட்டத்தில் ஈடுபடுவதென, தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆசிரியர்கள் முடிவு செய்திருந்தனர். 

இது தொடர்பாக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் காமராஜ், பொது செயலாளர் ரங்கராஜன், பொருளாளர் ஜோசப் சேவியர் உள்ளிட்டோர், தொடக்க கல்வி இயக்குனரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடன்பாடு எட்டவில்லை. 

 மாநில பொது செயலாளர் ரெங்கராஜ் கூறுகையில், "7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, திட்டமிட்டபடி, பிப்., 25 ல் நடக்கும் உள்ளிருப்பு போராட்டத்திலும், 26 ல் நடக்கும் வேலைநிறுத்தத்திலும் 60 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர், என்றார்.

Comments

Popular posts from this blog