ஆசிரியர் பணி வழங்க பரிசீலனை, நீதிமன்றம் உத்தரவு! ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவிக்கு ஆசிரியர் பணி வழங்க மறுத்த தேர்வு வாரியத்திற்கு நீதிமன்றம் உத்தரவு.

இதுகுறித்து கூறப்படுவதாவது: திருச்சி கிராபோர்டு ரெயில்வே குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சாஜூதாபர்வீன்(வயது 33). இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:"நான், பிளஸ்2 முடித்து விட்டு திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் பி.சி.ஏ பட்டப்படிப்பு படித்தேன். அதன்பின்பு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 2005ஆம் ஆண்டு எம்.ஏ ஆங்கில இலக்கியம் படித்தேன். இதன்பின்பு, இந்திராகாந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் மூலம் 2009ஆம் ஆண்டு பி.எட் முடித்தேன்.இதன்பின்பு, பி.ஏ ஆங்கில இலக்கியம் படித்தேன். 

கடந்த 21.7.2013 அன்று ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் கலந்து கொண்டேன். 91 மதிப்பெண்கள் பெற்று அந்த தேர்வில் வெற்றி பெற்றேன். பதிவு மூப்புக்காக ஒரு மதிப்பெண் வழங்கப்பட்டது. அதன்பின்பு நடந்த சான்றிதழ் சரிபார்ப்பிலும் கலந்து கொண்டேன்.இதனால், எனக்கு ஆசிரியர் பணி கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தேன். ஆனால், எனக்கு ஆசிரியர் பணி வழங்க மறுத்து 22.10.2013 அன்று தேர்வு வாரியம் உத்தரவிட்டது. 

காரணம் கேட்ட போது, நான் எம்.ஏ படிப்பை முடித்த பின்பு பி.ஏ படித்துள்ளதால் எனக்கு ஆசிரியர் பணி வழங்க முடியாது என்று தெரிவித்தனர்.நான், ஏற்கனவே அரசு விதித்துள்ள நடைமுறைப்படி பிளஸ்2 படித்து பட்டப்படிப்பை முடித்த பின்பு தான் எம்.ஏ படித்தேன். எனவே, எனக்கு ஆசிரியர் வேலை வழங்க மறுப்பது சரியல்ல. எனவே, எனக்கு ஆசிரியர் பணி வழங்க உத்தரவிட வேண்டும்."இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் எஸ்.எம்.ஏ.ஜின்னா ஆஜராகி வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதி உத்தரவில் கூறி இருப்பதாவது:"மனுதாரர் அரசு விதித்துள்ள நடைமுறைப்படி பிளஸ்2 படித்து விட்டு பட்டப்படிப்பை முடித்த பின்பு எம்.ஏ படித்துள்ளார். பட்டப்படிப்பையும்,எம்.ஏ படிப்பையும் வெவ்வேறு பாடப்பிரிவில் படித்ததால் எம்.ஏ முடித்த பின்பு எம்.ஏபடிப்புக்கான பாடப்பிரிவில் பி.ஏ படித்துள்ளார். இது தவறு அல்ல. 

இதற்காக மனுதாரருக்கு ஆசிரியர் பணி வழங்க மறுத்தது சரியல்ல. மனுதாரருக்கு ஆசிரியர் பணி வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் பரிசீலிக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog