ஆசிரியர்களின் 7 அம்ச கோரிக்கைகளை அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் ஜி.கே.மணி வேண்டுகோள்
‘‘ஆசிரியர்களின் 7 அம்ச கோரிக்கைகளை காலம் தாழ்த்தாமல் அரசு உடனே நிறைவேற்ற வேண்டும்’’ என்று பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆசிரியர்கள் வேதனை பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– ஒரு தனி மனிதனின் வளர்ச்சிக்கும், ஒரு குடும்பத்தின் உயர்வுக்கும், நாட்டின் மேம்பாட்டுக்கும் அடிப்படை கல்விதான். எனவே, அனைத்து தரப்பினருக்கும் தரமான கல்வி கொடுத்திட தேவையான அளவில் கூடுதல் ஆசிரியர்கள் நியமித்தல்,
ஆசிரியர்களின் தேவைக்கேற்ற ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுதல் போன்றவற்றை அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் கடந்த 2–ந் தேதி 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தது.
வருடக்கணக்கில் போராடியும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது ஆசிரியர்கள் மத்தியில் மனவேதனையை ஏற்படுத்தி உள்ளது. நிறைவேற்ற வேண்டும் எனவே, ஆசிரியர்கள் அனைவருக்கும் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். 6–வது ஊதியக்குழு பரிந்துரைப்படி புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள ஓய்வூதிய முறையை கைவிட்டு பழைய ஓய்வூதிய முறையையே நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஆசிரியர் தகுதித்தேர்வை கைவிட வேண்டும். தேவையான அளவில் கூடுதல் ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். பள்ளிகளுக்கு வரலாறு, புவியியல், பொருளாதாரம், வணிகவியல் ஆசிரியர்களையும், விளையாட்டு, தையல், ஓவியம், கைத்தொழில் போன்ற ஆசிரியர்களையும் நியமிக்க வேண்டும். இதனால் ஆசிரியர்கள் போராட்டத்தின் 7 அம்ச கோரிக்கைகளை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு ஜி.கே.மணி கூறி உள்ளார்.

Comments
Post a Comment