ஆசிரியர் தகுதித் தேர்வில், மதிப்பெண்களுக்கு சலுகை :முதல்வரின் அறிவிப்பை செயல்படுத்த தயாரகின்றது டிஆர்பி?
ஆசிரியர் தகுதித் தேர்வில், முதல்வர் ஜெயலலிதா இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 சதவீதம் சலுகை அறிவித்தார்.
கவர்னர் உரைக்கு பதில் அளித்து இன்று சட்டசபையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா,
'எஸ்,.சி., எஸ்.டி., எம்.பி.சி., மற்றும் சிறுபான்மையின மாணவர்கள் 55 சதவீத மதிப்பெண் பெற்றால்தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர். மேலும், ஆசிரியர் தகுதி தேர்வில்
இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 சதவீத சலுகை மதிப்பெண் வழங்கப்படும்,' என்று அறிவித்தார். 2013ம்ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்கும் இது பொருந்தும் எனவும் தெரிவித்தார்.
இத்தகவலால் தேர்வெழுதிய ஆயிரக்கணக்கான தேர்வர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதற்கிடையில் முதல்வரின் அறிவிப்பிற்கேற்ப அரசாணை வெளியிடப்பட்டவுடன் தொடர்பணிகளை மேற்கொள்ள ஆசிரியர் தேர்வுவாரியம் தயாராகிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு செக்.! போலீஸ் ஓகே சொன்னால் தான் இனி வேலை.? வெளியான முக்கிய அறிவிப்பு தமிழக அரசுப் பணியில் சேரும் நபர்களுக்கு நேரடி சரிபார்ப்பு நடத்தப்படும். TNPSC மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் காவல்துறை இ-சேவை போர்டல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு தமிழக அரசு பணியில் இணைவது பெரும்பாலான இளைஞர்களின் கனவாக இருக்கும், இதற்காக இளைஞர்கள் இரவு பகலாக படிப்பார்கள். அந்த வகையில் தமிழக அரசு பணியில் பணியாளர்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி மூலமாக குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வில் தமிழக இளைஞர்கள் வெற்றி பெறுவதற்கு இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. ஒரே ஆண்டில் 75ஆயிரம் பேருக்கு அரசு வேலை மேலும் தமிழக அரசில் காலியாக உள்ள 75ஆயிரம் பணியிடங்கள் 2026ஆம் ஆண்டிற்குள் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் அவ்வப்போது தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகிவருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்த நபர்களில் ஒரு சிலர் போலியான சான்றிதழ் கொடுத்ததும், குற்ற வழக்குகள் இரு...
Comments
Post a Comment