ஆசிரியர் தகுதித் தேர்வு: வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடப்படும் முறையை எதிர்த்து அரசாணை 252 ஐ இரத்து செய்யக்கோரி வழக்கு
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனத்துக்காகவழங்கப்படும் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிடும்முறையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில்வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் பதில் மனுத் தாக்கல் செய்யஅரசுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த சி.பிரியவதனா உயர்நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மனு விவரம்: நான் பி.ஏ.ஆங்கிலத்தில் 64.5 சதவீதம் மதிப்பெண்களும்,பி.எட். படிப்பில் 82 சதவீத மதிப்பெண்களும் பெற்றுள்ளேன். தற்போது எம்.ஏ.ஆங்கிலம் படித்து வருகிறேன். ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கடந்த
ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில்பங்கேற்று, 104 மதிப்பெண்கள் பெற்றேன்.
2012-ஆம் ஆண்டு அரசு ஆணையின்படி ஆசிரியர் தேர்வு வாரியம் வெயிட்டேஜ் மதிப்பெண்களை வழங்குகிறது. அதில் மேல்நிலைப் படிப்புக்கு 10 சதவீத மதிப்பெண்ணும், டிகிரி மற்றும்பி.எட். படிப்புக்கு தலா 15 சதவீத மதிப்பெண்ணும், ஆசிரியர்தகுதித்தேர்வுக்கு 60 சதவீத மதிப்பெண்ணும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஆசிரியர் தகுதி தேர்வுக்கு நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்கள் மொத்தம் 150.
இந்தத் தேர்வில் 136 மதிப்பெண் பெற்றால் அதற்கு 60 வெயிட்டேஜ் மதிப்பெண்வழங்கப்படுகிறது. 120 முதல் 135 மதிபெண்ணுக்கு 54 வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்படுகிறது. 105 முதல் 119 மதிப்பெண்ணுக்கு, 48வெயிட்டேஜ் மதிப்பெண்ணும், 90 முதல் 104 மதிப்பெண்ணுக்கு 42 வெயிட்டேஜ் மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது.
நான் தேர்வில் 104 மதிப்பெண்கள் பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு நடவடிக்கையில் பங்கேற்றேன். ஆனால், ஆசிரியர் பணி நியமனத்துக்கு நான் தேர்வாகவில்லை. இதற்கு மேற்குறிப்பிட்டநான்கு தேர்வுகளில் நான் பெற்ற உண்மையான மதிப்பெண்களுக்கு ஏற்றவிகிதத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடப்படாததே காரணம்.
ஆசிரியர் தகுதி தேர்வில் 90 மதிப்பெண்கள் பெற்றவருக்கும், 104 மதிப்பெண் பெற்ற எனக்கும் ஒரே மதிப்பெண் வழங்கப்படுகிறது. இதனால் நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். அதே நேரம், என்னை விட ஒரேயொரு மதிப்பெண் கூடுதலாக (105 மதிப்பெண்கள்) பெற்றவருக்கு என்னை விட அதிக மதிப்பெண் வழங்கப்படுகிறது.எனவே, இந்த முறை சட்ட விரோதமானது. இதுதொடர்பாக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வில் ஒவ்வொருவரும் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பெண் நிர்ணயம் செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு வெள்ளிக்கிழமை (பிப்.14)விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர்எஸ்.நமோநாராயணன் ஆஜராகினார். மனுவை விசாரித்த நீதிபதி பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் பதில் மனுத் தாக்கல் செய்யுமாறு அரசுக்கு நோட்டீஸ்
அனுப்ப உத்தரவிட்டார்.
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு செக்.! போலீஸ் ஓகே சொன்னால் தான் இனி வேலை.? வெளியான முக்கிய அறிவிப்பு தமிழக அரசுப் பணியில் சேரும் நபர்களுக்கு நேரடி சரிபார்ப்பு நடத்தப்படும். TNPSC மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் காவல்துறை இ-சேவை போர்டல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு தமிழக அரசு பணியில் இணைவது பெரும்பாலான இளைஞர்களின் கனவாக இருக்கும், இதற்காக இளைஞர்கள் இரவு பகலாக படிப்பார்கள். அந்த வகையில் தமிழக அரசு பணியில் பணியாளர்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி மூலமாக குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வில் தமிழக இளைஞர்கள் வெற்றி பெறுவதற்கு இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. ஒரே ஆண்டில் 75ஆயிரம் பேருக்கு அரசு வேலை மேலும் தமிழக அரசில் காலியாக உள்ள 75ஆயிரம் பணியிடங்கள் 2026ஆம் ஆண்டிற்குள் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் அவ்வப்போது தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகிவருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்த நபர்களில் ஒரு சிலர் போலியான சான்றிதழ் கொடுத்ததும், குற்ற வழக்குகள் இரு...
தமிழக அரசின் கண் துடைப்பு – தோற்றது சமூக நீதி !
ReplyDeleteசமூக நீதிக்கு எதிரான - இட ஒதுக்கீட்டிற்கு எதிரான தமிழக அரசின் முடிவு. தாழ்த்தப்பட்ட , மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பிரிவினரைப் பாதிக்குமாறு தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. 5% மதிப்பெண் குறைப்பு வெறும் கண் துடைப்பாக ஆக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் 82 முதல் 89 வரையில் மதிப்பெண் பெற்றவர்களுக்கு 36 மதிப்பெண் வெய்ட்டேஜாக வழங்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு எதிரான இந்த அரசாணையை நீக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கின்றோம் இதன் மூலம் “இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர்”. ஆசிரியர் தகுதித் தேர்வில் 82 முதல் 89 வரையில் மதிப்பெண் பெற்றவர்களுக்கு 42 மதிப்பெண் வெய்ட்டேஜாக வழங்க வகை செய்ய வேண்டும் .. உங்கள் ஆதரவுக்கு நன்றி.