ஆசிரியர் தகுதிதேர்வு 2012 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை பணி நியமன ஆணை வழங்கி வருகின்றது. ஆசிரியர் தகுதிதேர்வு 2012 ல் தேர்ச்சி பெற்று இணையான பாடத்திட்டம் உள்ளிட்ட பிரச்சனைகள் காராணமாக சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பின்னரும் பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. இவ்வாறு பாதிக்கப்பட்ட பலர் நீதிமன்றத்தை நாடி உத்தரவு பெற்றனர். அவ்வாறு உத்தரவு பெற்றவர்களுக்கும் பல்வேறு பிரச்சனையால் பணி வாய்ப்பு கிடைக்காமல் இருந்த பலருக்கு கடந்த செப்டம்பர் மாதம் மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. அவர்களில் தகுதியானவர்களுக்கு கடந்த சில நாட்களாக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் பணி நியமன ஆணை தனித்தனியாக வழங்கப்பட்டுவருகின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments

  1. தமிழக அரசின் கண் துடைப்பு – தோற்றது சமூக நீதி !
    சமூக நீதிக்கு எதிரான - இட ஒதுக்கீட்டிற்கு எதிரான தமிழக அரசின் முடிவு. தாழ்த்தப்பட்ட , மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பிரிவினரைப் பாதிக்குமாறு தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. 5% மதிப்பெண் குறைப்பு வெறும் கண் துடைப்பாக ஆக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் 82 முதல் 89 வரையில் மதிப்பெண் பெற்றவர்களுக்கு 36 மதிப்பெண் வெய்ட்டேஜாக வழங்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு எதிரான இந்த அரசாணையை நீக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கின்றோம் இதன் மூலம் “இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர்”. ஆசிரியர் தகுதித் தேர்வில் 82 முதல் 89 வரையில் மதிப்பெண் பெற்றவர்களுக்கு 42 மதிப்பெண் வெய்ட்டேஜாக வழங்க வகை செய்ய வேண்டும் .. உங்கள் ஆதரவுக்கு நன்றி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog