2012–ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதியவர்களுக்கும் 55 சதவீத நடைமுறை பொருந்த வேண்டும் கி.வீரமணி கோரிக்கை
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா, ஆசிரியர் தகுதித்தேர்வில் அனைவருக்கும் தகுதி மதிப்பெண் 60 சதவீதம் என்பதை சற்றே தளர்த்தி, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்டோருக்கு 55 சதவீத மதிப்பெண், தகுதி மதிப்பெண் என்று அறிவித்துள்ளார். இதனை முதல் நிலையிலே வரவேற்கிறோம்.
அதே நேரத்தில், ஆந்திரா போன்ற மாநிலங்களில் தாழ்த்தப்பட்டோருக்கும், முன்னேறியோர்க்கும் இடையிலான தகுதி மதிப்பெண் 20 இருக்கும்போது, இந்தியாவிலேயே 69 சதவீத இடஒதுக்கீடு சட்டப்படியாகப் பின்பற்றப்படும் தமிழ்நாடு இந்தப் பிரச்சினையில் முதல் இடத்தில் நின்று எடுத்துக்காட்டாக இருப்பதற்குப் பதிலாக பின் தங்கி இருப்பது எந்த வகையில் நியாயம்?. குறைந்த பட்சம் ஆந்திராவில் பின்பற்றப்படும் அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று முதல்–அமைச்சரை கேட்டுக்கொள்கிறோம்.
ஒரே வகையான தகுதித்தேர்வில் 2012–ல் தேர்வுக்கு ஒரு அளவுகோல், 2013–ல் தேர்வு எழுதியவருக்கு இன்னொரு அளவுகோலா?. 2012–ல் தேர்வு எழுதியவர்கள் நீதிமன்றம் சென்றால், அவர்களுக்கும் 55 சதவீத அளவுகோல் பொருந்தும் என்றுதானே தீர்ப்பு வெளிவரும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளில் கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு விடியல் கிடைக்குமா??? கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களின் கோரிக்கை கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து அதிமுக ஆட்சியால் பழி வாங்கப்பட்ட எங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விடியல் தருவாரா??? NCTE norms, நிலுவையில் உள்ள காலி பணியிடம் அதிமுக அரசு மூடி மறைத்து விட்டது இதை முதல்வர் ஸ்டாலின் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பாதிக்கப்பட்ட எங்களுக்கு வேலை கொடுப்பாரா??? தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயம் என்று NCTE அறிவித்தது. 15-11-2011 அன்று அதிமுக அரசு நடைமுறை படுத்தியது. அந்த NCTE அறிக்கையில் clause v விதிப்படி 23-08-2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து இருந்தால் அல்லது விளம்பரம் வெளியிடப்பட்டு இருந்தால் அல்லது பணி நியமன வேலைகள் தொடங்கி இருந்தால் டெட் தேர்வு தேவை இல்லை என்று அறிவித்து உள்ளது. இந்த அறிக்கை 11 ஆண்டுகள் கழித்து தான் 2022 ஆம் ஆண்டு திமுக அரச...
Comments
Post a Comment