2012 தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ் வழி இடஒதுக்கீட்டுக்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணை எப்போது ?
கடந்த 3 ஆம் தேதி 2011-12 ஆண்டுக்கான வரலாறு,வணிகவியல்,பொருளாதர பாடத்துக்கான முதுகலை ஆசிரியர் தமிழ் வழி இடஒதுக்கீட்டுக்கான தேர்வர்கள் பட்டியலை டிஆர்பி வெளியிட்டது. இதில் வராலாறு பாடத்துக்கான பட்டியலை மட்டும் டிஆர்பி வாபஸ்பெற்றுள்ளது.
இதுகுறித்து டிஆர்பி தனது இணையதளத்தில் RESULT FOR TAMIL MEDIUM HISTORY IS WITHDRAWN FOR COMPUTER VERIFICATION. என தெரிவித்துள்ளது.
உரிய கட்-ஆப் மதிப்பெண்கள் பெற்ற சிலரது பெயர் விடுபட்டதே அதற்கு காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.எனவே அது சரிசெய்யப்பட்டு புதிய பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால்.இதுவரை வரலாறு பாடத்துக்கான புதிய பட்டியல் வெளியிடப் படவில்லை
2012 தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ் வழி இடஒதுக்கீட்டுக்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளிக்கல்வி உயர் அலுவலர்களிடம் தங்களுக்கு விரைந்து பணி நியமனம் வழங்க கடந்த திங்களன்று நேரில் வேண்டுகோள் விடுத்தனர்.
தற்போது முதுகலை தமிழ் ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வுக்கான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள நிலையில் தங்கள் நியமனம் குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் இருப்பது வேதனையளிக்கின்றது என பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக காத்திருக்கும் தங்களுக்கு அரசு விரைவில் பணி நியமனம் வழங்கவேண்டும் என தமிழ் வழி இடஒதுக்கீட்டுக்கான தேர்வர்கள் எதிர்பார்க்கின்றனர்
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு செக்.! போலீஸ் ஓகே சொன்னால் தான் இனி வேலை.? வெளியான முக்கிய அறிவிப்பு தமிழக அரசுப் பணியில் சேரும் நபர்களுக்கு நேரடி சரிபார்ப்பு நடத்தப்படும். TNPSC மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் காவல்துறை இ-சேவை போர்டல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு தமிழக அரசு பணியில் இணைவது பெரும்பாலான இளைஞர்களின் கனவாக இருக்கும், இதற்காக இளைஞர்கள் இரவு பகலாக படிப்பார்கள். அந்த வகையில் தமிழக அரசு பணியில் பணியாளர்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி மூலமாக குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வில் தமிழக இளைஞர்கள் வெற்றி பெறுவதற்கு இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. ஒரே ஆண்டில் 75ஆயிரம் பேருக்கு அரசு வேலை மேலும் தமிழக அரசில் காலியாக உள்ள 75ஆயிரம் பணியிடங்கள் 2026ஆம் ஆண்டிற்குள் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் அவ்வப்போது தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகிவருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்த நபர்களில் ஒரு சிலர் போலியான சான்றிதழ் கொடுத்ததும், குற்ற வழக்குகள் இரு...
Comments
Post a Comment