PG/TET I / TET II-வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை( 29 .01.14 ) முதல் தொடர்ந்து தனித்தனி தொகுதியாக விசாரிக்க நீதியரசர் முடிவு

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் (200 க்கும் மேற்பட்டவழக்குகள் ) ஒருங்கிணைக்கப்பட்டு நீதியரசர் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1, தாள் 2 என அனைத்து வழக்குகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு பட்டியலிடப்பட்டிருந்தது எனவே அவற்றை தனித்தனியாக விசாரிப்பதற்கு வசதியாக தனியாக பட்டியலிட நீதியரசர் ஆர் சுப்பையா ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். 

அதன்படி இன்று 28 .01.14 ல் வழக்குகள் தனித்தனியாக வகைப்படுத்தி 200 வழக்குகள் பட்டியலிடப்பட்டிருந்தது.இதைத்தவிர முதுகலை ஆசிரியர் தமிழ்பாடத்தில் வெளியிடப்பட்ட இறுதி விடைக்குறிப்பில் சில விடைகள் தவறாக உள்ளது என அதனை எதிர்த்து 5 வழக்குகளும் இதர படங்களில் 4 வழக்குகளும் இன்று விசாரணைக்கு வந்தன. வழக்குகளை விசாரித்த நீதியரசர் ஆர் சுப்பையா PG/TET I / TET II-வழக்குகளை நாளை( 29 .01.14ல்)முதல் தொடர்ந்து தனித்தனி தொகுதியாக விசாரிக்க முடிவுசெய்தார். 

மேலும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஏற்கனவே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு முடிவுகண்ட வினாக்களைத்தவிர்த்து தாள் 1 ல் புதியதாக 5 வினாக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது பரிசீலனைக்கு எடுதுக்கொள்ளப்படக்கூடும் என்றும்,அதேபோல் தாள் 2 ல் பல வினாக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளதாகவும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்தார். அதனடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அனைத்து TET வழக்குகளும் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Comments

Popular posts from this blog