முதுகலை பட்டதாரி தமிழ் பலருக்கு கருணை மதிப்பெண்கள் news in detail
முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பி வரிசை வினாத்தாளால் பாதிக்கப்பட்ட பலருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கி சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு
முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணி நியமனத்துக்கான தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையிலும்,
மேலும் பல முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பி வரிசை வினாத்தாளால் பாதிக்கப்பட்டோர் தொடர்ந்து சென்னை உயர்நீதி மன்றத்திலும் மதுரைக்கிளையிலும் வழக்கு தொடுத்தவண்னம் உள்ளனர்
கடந்த வெள்ளியன்று நீதியரசர் சுப்பையா முன் விசாரணைக்கு வந்த 5 வழக்குகளில் ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் ஆண்டனி கிளாரா, விஜயலட்சுமி ஆகியோருக்கு 21 கருணைமதிப்பெண்கள் வழங்கி இடைக்கால உத்தரவு பிறப்பித்தது போன்று 5 மனுதாரர்களுக்கும் 21 கருணை மதிப்பெண்கள் வழங்கி
உத்தரவிட்டிருந்தார்.
இன்றும் அதேபோன்று பலவழக்குகள் நீதியரசர் சுப்பையா முன் விசாரணைக்கு வந்தன. பல்வேறு மாவட்டங்களைசேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, பத்மாவதி,சக்தி, மகேஸ்வரி,மேனகா.சத்யா,பொன்னி,உள்ளிட்ட பல மனுதாரர்கள் தங்களுக்கும் கருணை மதிப்பெண் வழங்கவேண்டும் என தங்கள் மனுவில் கோரியிருந்தனர்.அதனையேற்றுக்கொண்ட நீதிபதி அனைவருக்கும் 21 கருணை மதிப்பெண்கள் வழங்கி உத்தரவிட்டதாக தெரிகின்றது. மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் விஜயன்,இராஜேந்திரன்,ஜோதிமணி உள்ளிட்ட பலர் ஆஜராயினர்.
முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளில் கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு விடியல் கிடைக்குமா??? கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களின் கோரிக்கை கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து அதிமுக ஆட்சியால் பழி வாங்கப்பட்ட எங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விடியல் தருவாரா??? NCTE norms, நிலுவையில் உள்ள காலி பணியிடம் அதிமுக அரசு மூடி மறைத்து விட்டது இதை முதல்வர் ஸ்டாலின் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பாதிக்கப்பட்ட எங்களுக்கு வேலை கொடுப்பாரா??? தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயம் என்று NCTE அறிவித்தது. 15-11-2011 அன்று அதிமுக அரசு நடைமுறை படுத்தியது. அந்த NCTE அறிக்கையில் clause v விதிப்படி 23-08-2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து இருந்தால் அல்லது விளம்பரம் வெளியிடப்பட்டு இருந்தால் அல்லது பணி நியமன வேலைகள் தொடங்கி இருந்தால் டெட் தேர்வு தேவை இல்லை என்று அறிவித்து உள்ளது. இந்த அறிக்கை 11 ஆண்டுகள் கழித்து தான் 2022 ஆம் ஆண்டு திமுக அரச...
Comments
Post a Comment