ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்குகள் detailed news
முதுகலை ஆசிரியர் நியமனத்தேர்வு,ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் (250 க்கும் மேற்பட்டவழக்குகள் )ஒருங்கிணைக்கப்பட்டு நீதியரசர் ஆர் சுப்பையா முன்னிலையில் (20.01.14) பிற்பகல் 2 மணிக்கு மேல்விசாரணைக்கு வந்தன
முதுகலை ஆசிரியர் நியமனத்தேர்வு,ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1, தாள் 2 என அனைத்து வழக்குகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு பட்டியலிடப்பட்டிருந்தது எனவே அவற்றை தனித்தனியாக விசாரிப்பதற்கு வசதியாக நாளைமுதல் தனியாக வெவ்வேறு நாட்களில் அதாவது முதுகலை ஆசிரியர் நியமனத்தேர்வு ஒருநாளிலும், வெவ்வேறு நாட்களில் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 வழக்குகளை படியலிட நீதியரசர் உத்தரவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை உயர்நீதிமன்ற மன்ற மதுரைக்கிளை அளித்த தீர்ப்பு காரணமாக ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 வழக்கின் மனுதாரர்கள் பலருக்கு மதிப்பெண் கூடுதலாக கிடைத்து 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று தேர்ச்சி அடந்துள்ளனர் .அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பும் நடைபெறவுள்ளதால், அவர்களின் ரிட் மனுக்களை வாபஸ் பெறவிரும்புவதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.எனவே அவர்களின் வழக்குகள் நாளை (21.01.14 ) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு செக்.! போலீஸ் ஓகே சொன்னால் தான் இனி வேலை.? வெளியான முக்கிய அறிவிப்பு தமிழக அரசுப் பணியில் சேரும் நபர்களுக்கு நேரடி சரிபார்ப்பு நடத்தப்படும். TNPSC மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் காவல்துறை இ-சேவை போர்டல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு தமிழக அரசு பணியில் இணைவது பெரும்பாலான இளைஞர்களின் கனவாக இருக்கும், இதற்காக இளைஞர்கள் இரவு பகலாக படிப்பார்கள். அந்த வகையில் தமிழக அரசு பணியில் பணியாளர்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி மூலமாக குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வில் தமிழக இளைஞர்கள் வெற்றி பெறுவதற்கு இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. ஒரே ஆண்டில் 75ஆயிரம் பேருக்கு அரசு வேலை மேலும் தமிழக அரசில் காலியாக உள்ள 75ஆயிரம் பணியிடங்கள் 2026ஆம் ஆண்டிற்குள் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் அவ்வப்போது தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகிவருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்த நபர்களில் ஒரு சிலர் போலியான சான்றிதழ் கொடுத்ததும், குற்ற வழக்குகள் இரு...
Comments
Post a Comment