பிப். 2ல் இடைநிலை ஆசிரியர்கள் பேரணி இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க கோரி பிப்ரவரி 2ம்தேதி மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடைபெறுகிறது.

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு(டிட்டோஜாக்) நிர்வாகிகள் பாலசந்தர், தாஸ் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று 1988ம் ஆண்டு தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்தது. 

அதை தொடர்ந்து மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை பெற்று வந்தோம். ஆனால் 6வது ஊதியக் குழுவின் படி, இடைநிலை ஆசிரியர்களுக்கான அடிப்படை சம்பளத்தில் ரூ.5,500 குறைத்தனர். இதை எதிர்த்து கடந்த 3 ஆண்டு காலமாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம். 

அதிமுக அரசு தேர்தல் வாக்குறுதியின் போது, மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை பெற்று தருவதாக வாக்குறுதியளித்தது. ஆனால் அதையும் நிறைவேற்றவில்லை. அதோடு ஊதியக் குழுவில் ஆசிரியர்களின் கல்வி தகுதியை ஏளனம் செய்து தமிழக அரசு அறிக்கை தந்தது. இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை நீக்கவில்லை. 

மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வை நீக்குவது, தொடக்க கல்வித்துறையில் தமிழ் கல்வி முறை தொடர்ந்திட செய்வது உட்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 2ம்தேதி மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடத்தி கலெக்டரிடம் மனு அளிக்க உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Comments

Popular posts from this blog