டி.இ.டி., சலுகை மதிப்பெண்தமிழக அரசு தீவிர ஆலோசனை-Dinamalar 

 ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,), இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, மதிப்பெண் சலுகை அளிப்பது குறித்து, தீவிர ஆலோசனை நடந்து வருகிறது.இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, மதிப்பெண் சலுகை அளிக்க, அரசாணையில் வழிவகை செய்துவிட்டு,அதை அமல்படுத்த, ஆசிரியர் தேர்வு வாரியம் முன் வராததை, தேசிய ஆதிதிராவிடர்ஆணையத்தின், சென்னை மண்டல இயக்குனர், கடுமையாக விமர்சித்து உள்ளார்.

இடஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிராக, டி.ஆர்.பி., செயல்படுவதாக குற்றம் சாட்டி உள்ள இயக்குனர், 'உடனடியாக, டி.இ.டி., தேர்வில், மதிப்பெண் சலுகை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்;தவறினால், தேசிய ஆணையத்தின் கவனத்திற்கு, பிரச்னை கொண்டு செல்லப்படும்' என,எச்சரித்து உள்ளார்.

இந்த விவகாரம், பூதாகரமாக மாறி இருப்பதால், மதிப்பெண் சலுகை அளிப்பது குறித்து,டி.ஆர்.பி., தீவிர ஆலோசனையில் இறங்கி உள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த பிரச்னையில்,தன்னிச்சையாக, டி.ஆர்.பி., எந்த முடிவும் எடுக்க முடியாத நிலை உள்ளது.

ஆணையத்தின் உத்தரவு குறித்து, முதல்வரின்கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய முடிவை எடுக்க, டி.ஆர்.பி., தீர்மானித்து உள்ளது. மதிப்பெண் சலுகை அளிப்பது குறித்த அறிவிப்பை, முதல்வரே வெளியிடுவார் எனவும், எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog