ஆசிரியர் பணியிட மாறுதலில் ஊழல்: கல்வித்துறை மீது "களங்கம்"

ஆசிரியர் பணியிட மாறுதலில் பள்ளிக் கல்வித்துறையில் ஊழல் நடக்கிறது" என துவக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் அகில இந்திய செயலாளர் அண்ணமாலை கூறினார்.அவர் கூறியதாவது: இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியம் வழங்க வேண்டும். பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தைரத்து செய்ய வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் பிப்.,2 ல், ஊர்வலம் நடக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூனில் நடக்கும் ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு தவிர ஆண்டு முழுவதும் பணியிட மாறுதல் பணத்தை பெற்றுக் கொண்டு நடக்கிறது. இந்த மாறுதல் நடவடிக்கையை முதல்வர் ஜெ., தடுக்க வேண்டும்.ஆசிரியர் தகுதி தேர்வில் மற்ற மாநிலங்களை போல இன வாரியான இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டும். பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து அதற்கான பணத்தை செலுத்தி பணியின்போது இறந்த 120 பேருக்கும், ஓய்வு பெற்ற 60 பேருக்கும் உடனடியாக பணப் பலன்களை வழங்க வேண்டும்.

 தற்போது ஆசிரியர் தகுதி தேர்வில் 1800 காலி பணியிடங்களுக்கு இடைநிலை ஆசிரியர் 12 ஆயிரத்து 596 பேரும்; 12 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு 17 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்றவர்களை விட இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம் குறைவாக இருப்பதால் அவர்களுக்கு பணி வழங்கும் வரை அடுத்த தகுதித்தேர்வை நடத்தக் கூடாது. இவ்வாறு கூறினார்.

Comments

Popular posts from this blog