அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் பாடப்பிரிவுக்கு ஏற்ப ஒதுக்கீடு செய்ய கோரிக்கை
அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் மேல்நிலைப் பள்ளியில் படித்த பாடப் பிரிவுக்கு ஏற்ப ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் மேல்நிலைப்பள்ளியில் படித்த பாடப் பிரிவுக்கு ஏற்ப ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள3ஆயிரம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு முடிவு செய்தது.
இதற்காக அண்மையில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தியது. இடைநிலை ஆசிரியர் பணிக்காக ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்1-ஐ ஏராளமானோர் எழுதியிருந்தனர்.
இதில்12,596இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு பெற்றிருந்தனர்.3ஆயிரம் பணியிடங்களுக்கு12ஆயிரம் பேர் தேர்வு பெற்றதால்,இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.
அதாவது ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்1தேர்ச்சிப் பெற்று பதிவுமூப்பு அடிப்படையில் நியமனம் செய்யப்படுவர் என்று ஏற்கெனவே கல்வித் துறை அறிவித்திருந்தது.
ஆனால் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் பதிவுமூப்புக்கு பதிலாக வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் நியமனம் செய்வது போல,இடைநிலை ஆசிரியர் நியமனமும் இருக்கும் என்று திடீரென அறிவிக்கப்பட்டது.
அதாவது பிளஸ்2-வில் எடுத்த மதிப்பெண்,இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு,ஆசிரியர் தகுதிச் தேர்வு முறையே15, 25, 60மதிப்பெண்கள் என வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டன.
இது தேர்ச்சி சதவீதத்துக்கு ஏற்ப மாறுபடும். இதனால் பதிவுமூப்பு அடிப்படையில் வேலை கிடைத்துவிடும் என்று எண்ணியவர்கள் கலக்கமடைந்தனர்.
சான்றிதழ் சரிபார்க்கும் பணி: இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் தேர்வு பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி ஜனவரி20-ஆம் தேதி தொடங்கியது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர்களுக்கு காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
வியாழக்கிழமை வரை இடைநிலை ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை முதல் ஜனவரி28-ஆம் தேதி வரை பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெறும்.
மேல்நிலை பள்ளி பாடப்பிரிவு அடிப்படை: சான்றிதழ் சரிபார்க்க வந்த இடைநிலை ஆசிரியர்கள் சிலர் கூறியது:
இடைநிலை ஆசிரியர் நியமனம்,வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் நடைபெற உள்ளது. இதனால் பதிவு மூப்பு அடிப்படையில் காத்திருந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம்.
மேலும் இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் இதுவரை மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் படித்த பாடப்பிரிவுக்கு ஏற்ப ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதாவது மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பிரிவு படித்த மாணவர்களுக்கு50சதவீத இடங்கள்,கலைப் பிரிவு மாணவர்களுக்கும்,தொழிற்பிரிவு மாணவர்களுக்கும் தலா25சதவீத இடங்கள் என்ற அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் இருந்தது.
இப்போது அந்த முறையும் கடைப்பிடிக்கப்படுவதில்லை.
தொழில் பிரிவு மாணவர்களுக்கு ஆய்வக தேர்வு மூலமே400மதிப்பெண்கள் கிடைத்துவிடும். இதனால் வெயிட்டேஜ் முறையில் கணக்கிடப்படும்போது தொழில் பிரிவு மாணவர்கள் அதிக அளவில் தேர்வு பெறுகின்றனர்.
இதேபோல் கலைப்பிரிவு மாணவர்களும் அதிக அளவில் தேர்வு பெறுகின்றனர்.
ஆனால் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பிரிவு படித்தவர்கள் இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம்.
எனவே இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் மேல்நிலைப் பள்ளியில் படித்த பாடப்பிரிவுக்கு ஏற்ப ஒதுக்கீடு செய்ய தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு செக்.! போலீஸ் ஓகே சொன்னால் தான் இனி வேலை.? வெளியான முக்கிய அறிவிப்பு தமிழக அரசுப் பணியில் சேரும் நபர்களுக்கு நேரடி சரிபார்ப்பு நடத்தப்படும். TNPSC மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் காவல்துறை இ-சேவை போர்டல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு தமிழக அரசு பணியில் இணைவது பெரும்பாலான இளைஞர்களின் கனவாக இருக்கும், இதற்காக இளைஞர்கள் இரவு பகலாக படிப்பார்கள். அந்த வகையில் தமிழக அரசு பணியில் பணியாளர்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி மூலமாக குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வில் தமிழக இளைஞர்கள் வெற்றி பெறுவதற்கு இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. ஒரே ஆண்டில் 75ஆயிரம் பேருக்கு அரசு வேலை மேலும் தமிழக அரசில் காலியாக உள்ள 75ஆயிரம் பணியிடங்கள் 2026ஆம் ஆண்டிற்குள் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் அவ்வப்போது தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகிவருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்த நபர்களில் ஒரு சிலர் போலியான சான்றிதழ் கொடுத்ததும், குற்ற வழக்குகள் இரு...
Comments
Post a Comment