ஆசிரியர் தகுதித் தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்கியது
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
மாநிலம் முழுவதும் மொத்தம் 30 மையங்களில் ஜனவரி 28-ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது. கடந்த ஆகஸ்டில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற 29 ஆயிரத்து 528 பேர் இதில் பங்கேற்கின்றனர்.
சான்றிதழ் சரிபார்ப்புக்காக ஒவ்வொரு மையத்திலும் ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். முதல் நாளான திங்கள்கிழமை எந்தவிதப் பிரச்னையும் இன்றி சான்றிதழ் சரிபார்ப்பு சுமூகமாக நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தச் சான்றிதழ் சரிபார்ப்பின் அடிப்படையில் 2 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள், 13 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளில் கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு விடியல் கிடைக்குமா??? கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களின் கோரிக்கை கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து அதிமுக ஆட்சியால் பழி வாங்கப்பட்ட எங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விடியல் தருவாரா??? NCTE norms, நிலுவையில் உள்ள காலி பணியிடம் அதிமுக அரசு மூடி மறைத்து விட்டது இதை முதல்வர் ஸ்டாலின் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பாதிக்கப்பட்ட எங்களுக்கு வேலை கொடுப்பாரா??? தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயம் என்று NCTE அறிவித்தது. 15-11-2011 அன்று அதிமுக அரசு நடைமுறை படுத்தியது. அந்த NCTE அறிக்கையில் clause v விதிப்படி 23-08-2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து இருந்தால் அல்லது விளம்பரம் வெளியிடப்பட்டு இருந்தால் அல்லது பணி நியமன வேலைகள் தொடங்கி இருந்தால் டெட் தேர்வு தேவை இல்லை என்று அறிவித்து உள்ளது. இந்த அறிக்கை 11 ஆண்டுகள் கழித்து தான் 2022 ஆம் ஆண்டு திமுக அரச...
Sir my weightage in paper 2 is 78.. Im maths major.. MBC category. Will i get job?
ReplyDelete