ஆசிரியர் தகுதித் தேர்வு திருத்தப்பட்ட தேர்ச்சிப் பட்டியல் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும்?


ஆசிரியர் தகுதித் தேர்வு திருத்தப்பட்ட தேர்ச்சிப் பட்டியல் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த ஆகஸ்ட் 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. முதல் தாளை 2 லட்சத்து 60 ஆயிரம் பேரும், இரண்டாம் தாளை 4 லட்சம் பேரும் எழுதினர்.
இந்தத் தேர்வுக்கான முடிவுகள் நவம்பர் 5-ம் தேதி வெளியிடப்பட்டன. முதல் தாளில் 12 ஆயிரத்து 596 பேரும், இரண்டாம் தாளில் 14 ஆயிரத்து 496 பேரும் தேர்ச்சி பெற்றனர்.

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய விடைகளை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டன. இதனால், சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுவது தாமதமானது. இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி திருத்தப்பட்ட பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

முதல் தாள் மற்றும் இரண்டாம் தாளில் முக்கிய விடைகளை எதிர்த்து பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இதில் முதல் தாளுக்கான விடைகளில் ஒரு வினாவும்.இரண்டாம் தாளுக்கான சில முக்கிய விடைகளை திருத்தி வெளியிட நீதிமன்றம்  ஏற்கனவே  உத்தரவிட்டுள்ளது. நிலுவையில் உள்ள ஏராளமான வழக்குகளை முடிவுக்கு கொண்டுவர  டிஆர்பி முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது.

அதன்படி, திருத்தப்பட்ட விடைகளின் அடிப்படையில் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, புதிய தேர்ச்சிப் பட்டியல் இம்மாத இறுதிக்குள் தேர்வு முடிவுகள் வெளிவரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.  தேர்ச்சி பெற்ற அனைவரும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் 2 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களும், 13 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களும் நியமிக்கப்பட உள்ளனர்

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பட்டியல் வெளியிடப்பட்டது

 மொத்தம் 2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. தமிழ்ப் பாடத்துக்கான வினாத்தாளில் எழுத்துப் பிழைகள் உள்ளிட்டவை தொடர்பாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.
இந்நிலையில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் திருத்தப்பட்ட தேர்வுப் பட்டியல் நேற்று இரவு வெளியிடப்பட்டது  நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ள பாடங்களைத் தவிர்த்து (Except for Botany, History, Commerce, Physics, Chemistry and Tamil Subject)  மீதமுள்ள பாடங்களுக்கான திருத்தப்பட்ட புதிய தேர்வுப் பட்டியல்  வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு  ஜனவரி 17 ல் நடைபெற உள்ளது.கூடுதல் பட்டியலில் புதியதாக இடம்பெற்றவர்கள்,ஏற்கனவே நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள இயலாமல் போனவர்கள்  மற்றும் நீதிமன்ற ஆணை பெற்றவர்கள் நீதிமன்ற ஆணையுடன் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ளலாம் என டிஆர்பி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Comments

Popular posts from this blog