2,342
வி.ஏ.ஓ., பணிக்கு ஜூன் 15ல் தேர்வு & 1,181 பணியிடங்களை
நிரப்புவதற்கான குரூப் 2 தேர்வு, மே, 18ல் நடக்கிறது
சென்னை : நடப்பு ஆண்டிற்கான போட்டி தேர்வு அட்டவணையை, தமிழ்நாடு அரசு
பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி., ), நேற்று வெளியிட்டது. 2,342
வி.ஏ.ஓ., பணியிடங்கள் உட்பட, 3,700 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. வி.ஏ.ஓ.,
தேர்வு, ஜூன், 15ல் நடக்கிறது.
தேர்வாணைய தலைவர், நவநீதகிருஷ்ணன் இந்த ஆண்டு, 23 வகையான தேர்வுகள் நடக்க
உள்ளது. இதில், குரூப் 2 பிரிவில், 1,181 இடங்கள்; கிராம நிர்வாக அலுவலர்
(வி.ஏ.ஓ.,) பணிக்கு, 2,342 இடங்கள்; ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கு, 98
இடங்கள் நிரப்பபட உள்ளன,இவ்வாறு அவர் கூறினார்.
அறிவிக்கப்பட்டதில், 3,700 காலி பணியிடங்கள் மட்டும் இடம் பெற்று உள்ளன.
குரூப் 1, குரூப் 4 உட்பட, எட்டு வகையான தேர்வுகளுக்கு, காலி பணியிடங்கள்
விவரம் தெரிவிக்கவில்லை.
தேர்வு அட்டவணை, www.tnpsc.gov.inஎன்ற, தேர்வாணைய இணையதளத்தில்
வெளியிடப்பட்டு உள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு செக்.! போலீஸ் ஓகே சொன்னால் தான் இனி வேலை.? வெளியான முக்கிய அறிவிப்பு தமிழக அரசுப் பணியில் சேரும் நபர்களுக்கு நேரடி சரிபார்ப்பு நடத்தப்படும். TNPSC மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் காவல்துறை இ-சேவை போர்டல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு தமிழக அரசு பணியில் இணைவது பெரும்பாலான இளைஞர்களின் கனவாக இருக்கும், இதற்காக இளைஞர்கள் இரவு பகலாக படிப்பார்கள். அந்த வகையில் தமிழக அரசு பணியில் பணியாளர்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி மூலமாக குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வில் தமிழக இளைஞர்கள் வெற்றி பெறுவதற்கு இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. ஒரே ஆண்டில் 75ஆயிரம் பேருக்கு அரசு வேலை மேலும் தமிழக அரசில் காலியாக உள்ள 75ஆயிரம் பணியிடங்கள் 2026ஆம் ஆண்டிற்குள் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் அவ்வப்போது தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகிவருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்த நபர்களில் ஒரு சிலர் போலியான சான்றிதழ் கொடுத்ததும், குற்ற வழக்குகள் இரு...
Comments
Post a Comment