குரூப் -1 பிரதான தேர்வில் பங்கேற்றவர்களுக்கு மறு தேர்வு நடத்தும்படி, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது ஆந்திர பிரதேச அரசு பணியாளர் தேர்வாணையம், 2011ம் ஆண்டு நடத்திய, குரூப் -1 பிரதான தேர்வில் பங்கேற்றவர்களுக்கு மறு தேர்வு நடத்தும்படி, சுப்ரீம் கோர்ட்உத்தரவிட்டுள்ளது. ஆந்திர அரசு பணியாளர் தேர்வாணையம், 2011ம் ஆண்டில், குரூப் - 1பணியிடங்களுக்கு ஆட்களை தேர்ந்தெடுக்க தேர்வு நடத்தியது. முதல் நிலை தேர்வு, பிரதான தேர்வு என, இரு பிரிவுகளாக தேர்வு நடத்தப்பட்டது. முதல் நிலை தேர்வில், கேள்வித்தாள்களில், சில தவறுகள் இருந்ததாக, தேர்வாளர்கள் குற்றம் சாட்டினர். எனவே, பிரதான தேர்வு பங்கேற்கப்பவர்களை தேர்ந்தெடுக்க வேண்டாம். மீண்டும் தேர்வை நடத்த வேண்டும் எனக் கோரி, பல விண்ணப்பதாரர்கள், ஆந்திர ஐகோர்ட்டில்மனு செய்தனர். இதற்கிடையில், முதல் நிலை தேர்வில் பங்கேற்றவர்களில் இருந்து, 16 ஆயிரம்பேரை தேர்ந்தெடுத்து, பிரதான தேர்வில் பங்கேற்க அழைப்பு விடுத்தது.இதில், 9,000 பேர்மட்டுமே பங்கேற்றனர். விண்ணப்பதாரர்களின் மனுவை விசாரித்த, ஆந்திர ஐகோர்ட், பிரதான தேர்வை, அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் நடத்தும்படி, ஆந்திர அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, ஆந்திர அரசு பணியாளர் தேர்வாணையம், சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது. அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் வாதாடிய வக்கீல் கூறுகையில், 'அனைத்து நடவடிக்கைகளும் முடிந்து, 209 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்' என, கூறினார். இரு தரப்பு வாதங்களையும், கேட்ட சுப்ரீம் கோர்ட், 2011 குரூப்-1 பிரதான (மெயின்) தேர்வில் பங்கேற்ற அனைவருக்கும் மறு தேர்வு நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டது. இதுகுறித்து, ஆந்திர பிரதேச அரசு தேர்வாணைய அதிகாரி கூறுகையில், 'சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பின் நகலை பார்த்தபிறகு தான் அடுத்த நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம்' என்றார். ஆந்திர அரசு பணியாளர்தேர்வாணையம், பிரதான தேர்வில் பங்கேற்றவர்களில் இருந்து, 300 பேரை தேர்வு செய்து, நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு விடுத்து இருந்தது. சுப்ரீம் கோர்ட் உத்தரவை அடுத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, பிரதான தேர்வில் பங்கேற்றவர்கள், நேர்முகத் தேர்வில் பங்கேற்றவர்கள் மீண்டும் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

Comments

Popular posts from this blog