Posts

Showing posts from December 31, 2013
உபரி ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய கல்வித் துறை நடவடிக்கை: கலக்கத்தில் உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள். தமிழகத்தில், அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், உபரி ஆசிரியர்களை கணக்கெடுத்து, அவர்களை இடமாற்றம் செய்ய, கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. பலலட்ச ரூபாய் செலவு செய்து, பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர். அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், 160 மாணவர்களுக்கு, ஐந்து பட்டதாரி ஆசிரியர்கள் வீதம், பணியில் நியமிக்கலாம். பின், ஒவ்வொரு, 30மாணவர்களுக்கும், ஓர் ஆசிரியர் வீதம், கூடுதலாக நியமிக்கலாம். மாநில அளவில், அரசு உதவி பெறும் பள்ளிகளில், 2013 ஆக., 1ம் தேதி படி, ஆசிரியர்கள், மாணவர்கள் விகித கணக்கெடுப்பு நடந்தது.  நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கையை விட, ஆசிரியர்கள் அதிகம் உள்ளது கண்டறியப்பட்டது. இதையடுத்து, உபரி ஆசிரியர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி, மாணவர்கள் மற்றும்ஆசிரியர்கள் விகிதாசார அடிப்படையில், ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய - பணிநிரவல் செய்ய, பள்ளிக் கல்வித் துறை இயக்குனர், ராமேஸ்வரமுரு