ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அடுத்த தலைவலி...! உதவி பேராசிரியர்கள் நியமனத்தை எதிர்த்து வழக்கு...! அரசு கலைக் கல்லூரிகளில், உதவி பேராசிரியர்கள் நியமனத்தில்,"நெட்" தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் குறைந்த மதிப்பெண் வழங்குகிறது. பல்கலை மானியக்குழு விதிக்கு புறம்பான இந்த நியமனங்களுக்கான அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்" எனக் கோரி மதுரை ஐகோர்ட் கிளையில், மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மதுரையைச் சேர்ந்த ராஜேஷ் தாக்கல் செய்த மனு: எம்.எஸ்சி., முடித்து விரிவுரையாளர் பணிக்கான, தேசிய தகுதித் தேர்வான - நெட் - தேர்ச்சியடைந்துள்ளேன். அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 1,093 உதவி பேராசிரியர்களை நியமிக்க மே 28ல், ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் அறிவிப்பு வெளியிட்டார்.அதில், "உதவி பேராசிரியர் பணிக்கான தகுதிகளாக முதுகலை பட்டம், அதே பாடத்தில், நெட் தேர்வில் தேர்ச்சி அல்லது முதுகலை பட்டம், பிரதான பாடத்தில், பிஎச்.டி., முடித்திருக்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டிருந்தது. பல்கலை மானியக் குழு 2009ல் வெளியிட்ட விதிகள்படி, பிஎச்.டி., முடித்தவர்கள்...
Posts
Showing posts from December 24, 2013