முதுநிலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியீடு. முதுநிலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை இணையதளத்தில் காணலாம்.முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பதவிகளுக்காக ஜூலை 21இல் டி.ஆர்.பி.ஆல் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத்தேர்விற்காக 1 லட்சத்து 67 ஆயிரத்து 688 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் தேர்வு எழுதியோர் எண்ணிக்கை 1 லட்சத்து 59 ஆயிரத்து 748. தமிழ் தவிர இதர பாடங்களுக்கான முடிவுகள் 07 அக்டோபர் 2013 அன்று வெளியானது. இன்று (23.12.2013)தமிழ் பாடத்திற்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை டி.ஆர்.பி.இன் http://trb.tn.nic.in இணையதளத்தில் காணலாம்.மேலும், சான்றிதழ் சரிபார்ப்புக்கு ஓவ்வொருவருக்கும் தனித்தனியாக கடிதங்கள் அனுப்பப்படாது எனவும், இணையதளத்தில் உள்ள தகவல்களை பார்த்து, அதன் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ளலாம், என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. சான்றிதழ் சரிபார்க்கும் மையங்கள்சான்றிதழ் சரிபார்ப்பு டிசம்பர் 30 மற்றும் 31ஆம் தேதிகளில் மதுரை,சேலம்,
Posts
Showing posts from December 23, 2013
- Get link
- X
- Other Apps
குரூப்–4 தேர்வு முடிவு ஜனவரி 2–வது வாரத்தில் வெளியிடப்படும் ஏ.நவநீதகிருஷ்ணன் பேட்டி தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-4 தேர்வு கடந்த ஆகஸ்டு மாதம் 25–ந்தேதி நடந்தது. இந்த தேர்வு மூலம் 5 ஆயிரத்து 556 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தேர்வை 12 லட்சத்து 21 ஆயிரத்து 167 பேர் எழுதினார்கள்.காலி பணியிடங்களில் 3 ஆயிரத்து 531 இளநிலை உதவியாளர் பணியிடங்கள், 1738 தட்டச்சர் பணியிடங்கள், 242 சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்கள் ஆகும். 30 வரைவாளர் பணியிடங்களும், 6 நில அளவர் பணியிடங்களும் சேர்த்து மொத்தம் 5 ஆயிரத்து 566 பணியிடங்கள் ஆகும். தேர்வு முடிவை வெளியிடுவதற்காக அனைத்துப் பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது. என்றும் ஜனவரி 2–வது வாரத்தில் குரூப்–4 தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று ஏ.நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.
- Get link
- X
- Other Apps
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தமிழ் பாட முடிவு வெளியீடு. முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தமிழ் பாட முடிவு வெளியிடப்பட்டுள்ளது. www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவை அறிந்து கொள்ளலாம்.நீதிமன்ற வழக்கால் முதுநிலை ஆசிரியர் தமிழ் பாடத் தேர்வு முடிவு நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.தமிழ் தவிர்த்து பிற பாடங்களுக்கான தேர்வு முடிவுகள் அக்.7இல் வெளியிடப்பட்டன.முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த ஜூலை 21இல் நடைபெற்றது. CERTIFICATE VERIFICATION DATES: 30.12.2013 and 31.12.2013
- Get link
- X
- Other Apps
அரசு பள்ளிகளில் 5,000 ஆசிரியர் காலியிடம்: பிளஸ் 2 மாணவர்கள் பாதிப்பு அரசு பள்ளிகளில்5ஆயிரம் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் அரசு பொதுதேர்விற்கு தயாராகும் பிளஸ்2மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநில அளவில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு,உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. நடப்பு காலம் வரை தமிழ்,ஆங்கிலம்,கணிதம் உட்பட அனைத்து பாடங்களுக்கும் 5ஆயிரம் முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில்,மாநிலம் முழுவதும் 3,585முதுகலை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்காக பணி மூப்பு பட்டியலில் உள்ளனர். இதற்கான,கவுன்சிலிங் அறிவிக்கவில்லை.மேலும்,ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வின் மூலம் தேர்ச்சி பெற்ற 2,000முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவும் வரவில்லை தவிப்பு இந்த சூழலில்,மார்ச்சில் பிளஸ்2மாணவர்களுக்கான அரசு பொதுதேர்வை தேர்வுத்துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது. தேர்வை சந்திக்க மாணவர்கள் தயாரான நிலையில்,அரசு மேல்நிலைப்பள்ளிகளில் போதிய முதுகலை ஆசிரியர்களின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக,முக்கிய பாடங்களான கணிதம்,ஆங்கிலத்திற்கு கூட ஆசிரியர்கள் இல்லை. இதன