Posts

Showing posts from December 22, 2013
இப்போதைக்கு டி.இ.டி., முதுகலை ஆசிரியர் தேர்வு இறுதி பட்டியல் வர வாய்ப்பில்லை ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) தொடர்பாக,சென்னை, உயர்நீதிமன்றத்தில், 180 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதனால், ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,), எரிச்சலும், விரக்தியும் அடைந்து வருகிறது. கடந்த காலங்களில், ஒரு தேர்வை நடத்தினால், அதற்கு அடுத்த பணிகள், விறுவிறுப்பாக நடந்து, சிலமாதங்களுக்குள், இறுதி தேர்வு பட்டியல் வெளியாகிவிடும். தற்போது, ஒவ்வொரு தேர்வையும்,நடத்தி முடித்து,இறுதி பட்டியலை வெளியிடுவதற்குள், டி.ஆர்.பி.,க்கு, தலை சுற்றிவிடுகிறது. ஒரு தேர்வு நடந்தால்,அது தொடர்பான கேள்வித்தாள் மற்றும் விடைகள் குளறுபடி தொடர்பாக, தேர்வர்கள், வழக்குமேல்,வழக்கு போடுகின்றனர். தேர்வர்களின், சந்தேகங்கள்,கோரிக்கை மனுக்கள் குறித்து, பாட வாரியான நிபுணர் குழு மூலம், ஆய்வு செய்து, இறுதி முடிவை எடுத்து அறிவித்தாலும், வழக்குகள் தாக்கலாவது குறைந்தபாடில்லை. ஒரு மதிப்பெண்ணில், ஒருவரின் எதிர்காலம தீர்மானிக்கப்படும் நிலை இருப்பதால், தேர்வர்களும்,முடிந்தவரை, போராடுகின்றனர். ஜூலையில் நடந்த, முதுகலை ஆசிரியர் தேர்வுப் பணி, இன்று வ...