Posts

Showing posts from December 20, 2013
தமிழ் ஆசிரியர் தேர்வு முடிவு வெளியாவதில் மீண்டும் சிக்கல்  முதுகலை தமிழ் ஆசிரியர் தேர்வு முடிவை வெளியிடுவதில்,மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில்,2,891 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஜூலையில், போட்டித் தேர்வுநடந்தது.   தமிழ் பாடம் தவிர,இதர பாடங்களுக்கான தேர்வு முடிவை,ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,)வெளியிட்டு,சான்றிதழ் சரிபார்ப்பையும்,நடத்தி முடித்துவிட்டது. "தமிழ் பாட கேள்வித்தாளில்,சில பிழையான கேள்விகள் இடம் பெற்றன;இதற்கு,உரிய மதிப்பெண் தர வேண்டும்'என வலியுறுத்தி,உயர்நீதிமன்ற,மதுரை கிளையில்,சில தேர்வர்கள்,வழக்கு தொடர்ந்தனர்.  இதன் காரணமாக,தமிழ் பாடத் தேர்வு முடிவை,டி.ஆர்.பி.,வெளியிடவில்லை.  இந்நிலையில்,சமீபத்தில்,தமிழ் பாடத்தேர்வு முடிவை வெளியிட, உயர்நீதிமன்ற  மதுரை கிளை அனுமதி அளித்தது. ஆனாலும், இதுவரை,தமிழ் பாடத் தேர்வு முடிவு வெளியாகவில்லை.  இது குறித்து,டி.ஆர்.பி.,வட்டாரம் கூறுகையில், "மதுரை கிளையில்,வழக்கு முடிந்த நிலையில்,சென்னை உயர்நீதிமன்றத்தில்,சிலர்,வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில்,முடிவு வந்...
மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த அரசாணை வெளியீடு. இந்த சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதும் பார்வையற்றவர்களுக்கும், அவர்களது உதவியாளர்களுக்கும் பயிற்சி வழங்குவதற்காக ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது. சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சென்னையில் தொடர் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.  இந்த நிலையில், அவர்களின் கோரிக்கைகள் குறித்து பரிசீலிப்பதற்காக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி நடைபெற்றது. அதன்பிறகு, மாற்றுத்திறனாளிக்காக சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். பி.எட். படித்து வேலையில்லாமல் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைப்பதற்காக தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்த உத்தரவிடப்படுகிறது. இந்தத் தேர்வில் தகுதி பெறும் பி.எட். பட்டதாரிகள் இப்போதுள்ள பின்னடைவு காலிப்பணிய...
TRB PG TAMIL மேல்முறையீட்டு வழக்கு  முதுகலைப் பட்டதாரி தமிழ் ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வில், பி வரிசை வினாத்தாளில் 40 கேள்விகள் எழுத்துப் பிழைகளுடன் இருந்தன. பிழையான கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும் எனக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது.  இந்த மனுவை விசாரித்த நீதிபதிஎஸ்.நாகமுத்து, தமிழ்ப்பாடத்துக்கு மறுதேர்வு நடத்த ஆசிரியர் தேர்வுவாரியத்துக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச்செயலர், இயக்குநர்,டிஆர்பி செயலர் ஆகியோர் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தனர்.   சென்ற வாரம் நீதியரசர்கள் சுதாகர், எஸ். வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு தனி நீதிபதியின் தீர்ப்பினை இரத்துசெய்து தேர்வு முடிவினை வெளியிடவும்,, வழக்கு தொடுத்த கிளாரா, விஜயலட்சுமி ஆகியோருக்கு மட்டும் 21 கருணை மதிப்பெண் வழங்கியும் இடைக்கால உத்தரவு பிறப்பித்து வழக்கினை 20.12.13 க்கு ஒத்தி வைத்தது.  இந்நிலையில் நாளை (20.12.13 ) அவ்வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிருஸ்துமஸ் பண்ட...