Posts

Showing posts from December 19, 2013
முதுகலைப் பட்டதாரி தமிழ் ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு புதிய வழக்கு தாக்கல் முதுகலைப் பட்டதாரி தமிழ்ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில்,பி வரிசை வினாத்தாளில் 40 கேள்விகள் எழுத்துப் பிழைகளுடன் இருந்தன.பிழையான கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல்செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து, தமிழ்ப்பாடத்துக்கு மறுதேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டார் . இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச்செயலர், இயக்குநர், டிஆர்பி செயலர் ஆகியோர் மேல்முறையீடு மனுவைத்தாக்கல் செய்தனர் . சென்ற வாரம் நீதியரசர்கள் சுதாகர், எஸ். வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு தனி நீதிபதியின் தீர்ப்பினை இரத்துசெய்து தேர்வு முடிவினை வெளியிடவும்,, வழக்கு தொடுத்த கிளாரா, விஜயலட்சுமி ஆகியோருக்கு மட்டும் 21 கருணை மதிப்பெண் வழங்கி அவர்களுக்கு இரண்டு பணியிடங்களை ஒதுக்கிவைக்கவும் இடைக்கால உத்தரவு பிறப்பித்து வழக்கினை 20.12.13 க்கு ஒத்தி வைத்தது. இதற்கிடையில் மதுரையைச் சேர்ந்த ஜாய்ஸ் சுகிர்தா ராணி உள்ளிட்ட
மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் 2016க்குள் டெட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் - இயக்குனர்  தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்: மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கு சிக்கல். அனைத்து ஆசிரியர்களும், 2016க்குள்,தகுதித்தேர்வில்தேர்ச்சி பெற்றிக்க வேண்டுமென,மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் உத்தரவு கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் ,பள்ளிகளில் 10ம் வகுப்பு வரை,தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் எனவும், 2010ஆக., 23க்கு பிறகு,நியமனம் பெற்ற ஆசிரியர்கள் 5 ஆண்டுகளுக்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதை,ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறை செயல்படுத்தியதால்,அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளின் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர்.இந்நிலையில், 2016க்குள் மெட்ரிக் பள்ளிகளின் ஆசிரியர்களும்,தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென,இயக்குனரகமும் உத்தரவிட்டது.  இதனால்,பல தனியார் பள்ளிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.தனியார் மெட்ரிக் பள்ளி நிர்வாகி ஒருவர் கூறுகையில், "ஏற்கனவே,தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற சி