ஒரு வருட சார்பான வழக்கறிஞர் வாய்தா வாங்கியதால் மீண்டும் இரட்டைப்பட்டம் ஜனவரி 2 க்கு ஒத்திவைப்பு இன்று (13.12.2013 )சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் அமர்வில் 69வது வழக்காக பிற்பகல்1.10 மணியளவில் விசாரணைக்கு வந்தது. மேலும் அரசு தரப்பில்AFFIDAVITதாக்கல் செய்தனர்.அரசு தரப்பு AFFIDAVITக்கு தேவையான தகவல்கள் திரட்ட வேண்டி ஒரு வருட சார்பாக வாதாடிய வழக்கறிஞர் திரு.சங்கரன் அவர்கள் 'வாய்தா' வாங்கியதால் வழக்கு விசாரணை ஜனவரி2க்கு ஒத்திவைத்து நீதியரசர் உத்தரவு பிறபித்தார். இதனால் வழக்கு இன்றும் முடியாமல் போனது.பட்டதாரி ஆசிரியர்கள் இடமாறுதல் பெறமுடியாமல் உள்ளனர்.மேலும் பல ஆசிரியர்கள் தங்கள் சொந்த மாவட்டத்திற்கு செல்ல முடியாமல் மன நிம்மதியின்றி தவித்து வருகின்றனர்.
Posts
Showing posts from December 13, 2013
- Get link
- X
- Other Apps
தவறாக அச்சிடப்பட்ட வினா: ஒரு மதிப்பெண்ணில் வெற்றி வாய்ப்பை இழந்த தேர்வர் கண்ணீர் ஆசிரியர் தகுதித் தேர்வில், ஒரே கேள்வி எண்ணில் உள்ள தமிழ் மற்றும் ஆங்கில வழி கேள்விகள் வேறுபட்டு இருப்பதுடன், இதற்கான பதில்களும் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மீது புதிய புகார் எழுந்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில், ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த ஆகஸ்ட் 17 மற்றும் 18ம் தேதி நடந்தது. இதில் 6.60 லட்சம் பேர் பங்கேற்றனர். டி.இ.டி., தேர்வு முடிவு நவ., 5 ம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வில், 4.09 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். சரியான பல பதில்களுக்கு மதிப்பெண் தரவில்லை என ஆசிரியர் தேர்வு வாரியத்தில் புகார்கள் குவிந்தன. இந்நிலையில் தற்போது இரண்டாம் தாள் சமூக அறிவியல் தேர்வில்கேள்வித்தாளில் தமிழ் வழியில் ஒரு மாதிரியாகவும், ஆங்கில வழியில் ஒரு மாதிரியாகவும், கேள்வியே தவறாக கொடுக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.