முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம்தேதி நடைபெற்றது. 2,881 பணியிடங்களுக்கான இந்தத் தேர்வை 1.60 லட்சம் பேர் எழுதினர். இதில், அதிகபட்சமாக, தமிழ் பாட தேர்வை, 33,237 பேர் எழுதினர். விடைத்தாள்கள் அனைத்தும் மதிப்பீடு செய்யப்பட்டு, தேர்வுப் பட்டியலை வெளியிட,டி.ஆர்.பி., தயாரான நிலையில், மதுரை புதூர் விஜயலட்சுமி தாக்கல் செய்த மனுவில்,"முதுகலை பட்டதாரி தமிழாசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில், "பி' வரிசை வினாத்தாள்களில், 47 கேள்விகளில் அச்சுப்பிழைகள் காரணமாக,அவற்றுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும்; தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க வேண்டும்' என்றார். இதேபோல், திருச்சி, அந்தோணி கிளாரா, மற்றொரு மனு செய்தார். அக்., 1ல், நீதிபதி எஸ்.நாகமுத்து பிறப்பித்த உத்தரவில், "இதற்கு, ஒரே தீர்வு, மறு தேர்வு தான். ஜூலை 21ல் நடந்த தமிழாசிரியர் நியமன தேர்வு ரத்து செய்யப்படுகிறது. ஆறு வாரங்களுக்குள், டி.ஆர்.பி., மறு தேர்வு நடத்த வேண்டும்' என்றார். இதை எதிர்த்து, டி....
Posts
Showing posts from December 11, 2013
- Get link
- X
- Other Apps
FLASH NEWS: TRB PG APPEAL CASE முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு இன்று 11.12.13 புதன்கிழமை மதுரை ஐகோர்ட்கிளை பெஞ்ச் நீதியரசர்கள் சுதாகர்,வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்.விசாரணைக்கு வந்தது நீதியரசர்கள் தேர்வு முடிவினை வெளியிட அனுமதி அளித்தனர். அதே சமயத்தில் வழக்கு தொடுத்த விஜயலட்சுமி மற்றும் ஆண்டனி கிளாரா ஆகியோருக்கு இரு பணியிடங்களை ஒதுக்கிவைக்கவும் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரிவான செய்தி பின்னர் வெளியிடப்படும்
- Get link
- X
- Other Apps
உதவிப் பேராசிரியர் நியமனத்துக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்கவில்லை உதவிப் பேராசிரியர் நியமனத்துக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்கவில்லை என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளில் மொத்தம் 1,063 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு சென்னையில் 3 மையங்களில் நடைபெற்றது. சென்னையில் அண்ணாசாலையில் உள்ள காயிதே மில்லத் மகளிர் கல்லூரி, நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரி, காமராஜர் சாலையில் உள்ள லேடி வெலிங்டன் கல்வியியல் நிறுவனம் ஆகியவற்றில் நவம்பர் 25 முதல் டிசம்பர் 6 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. இந்த சான்றிதழ் சரிபார்ப்புக்காக 14,600 பேர் அழைக்கப்பட்டிருந்தனர்.இவர்களில் 22 சதவீதம் பேர் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கவில்லை என சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்தன. இதுதொடர்பாக, அந்த வட்டாரங்கள் மேலும் கூறியது: சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களின் விவரங்களைச் சரிபார்க்கும்பணி அடுத்து தொடங்கப்படவுள்ளது. இந்தப் பணி 10 நாள்கள்வரை நடைபெற...
- Get link
- X
- Other Apps
குரூப்–4 தேர்வு முடிவு ஜனவரி முதல் வாரத்தில் வெளியிடப்படும்: அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் நவநீதகிருஷ்ணன் பேட்டி குரூப்–4 தேர்வு முடிவு ஜனவரி முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார். குரூப்–4 தேர்வு தமிழ்நாட்டில் காலியாக உள்ள 3 ஆயிரத்து 531 இளநிலை உதவியாளர் பணியிடங்கள், 1738 தட்டச்சர் பணியிடங்கள், 242 சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்கள் உள்பட மொத்தம் 5 ஆயிரத்து 556 பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்காக குரூப்–4 தேர்வு கடந்த ஆகஸ்டு மாதம் 25–ந்தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 12 லட்சத்து 21 ஆயிரத்து 167 பேர் எழுதினார்கள். குரூப்– 4 தேர்வு முடிவு எப்போது வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் ஏ.நவநீத கிருஷ்ணனிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:– முடிவு அடுத்த மாதம் வெளியாகும் குரூப்–4 தேர்வை நிறைய மாணவர்கள் எழுதியதால் அதை வெளியிடுவதில் சற்று தாமதம் ஏற்படுகிறது. அதில் பெரும்பாலான வேலைகள் முடிந்துவிட்டன. இருப்பினும் அனைத்தையும் மீண்டும் சரிபார்க்கும் பணி உள்ளது. எனவே ...