Posts

Showing posts from December 7, 2013
நாடு முழுவதும் 6 லட்சம் ஆசிரியர்கள் பற்றாக்குறை: மத்திய மந்திரி பல்லம் ராஜூ தகவல் நாடு முழுவதும் 6 லட்சம் ஆசிரியர்கள் பற்றாக்குறையாக இருப்பதாக மத்திய மந்திரி பல்லம் ராஜூ தெரிவித்துள்ளார்.ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பல்லம் ராஜூ, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 6 லட்சம் ஆசிரியர்கள் பள்ளிகளின் உள் கட்டமைப்பு மேம்பாடு, ஆசிரியர் நியமனம் உள்ளிட்டவற்றில் நாம் விரைவாக முன்னேறி வருகிறோம். ஆனால் தரமான கல்விச்சேவையில் இன்னும் அதிக முன்னேற்றம் தேவைப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக ஆசிரியர் பற்றாக்குறை விளங்கி வருகிறது.நாடு முழுவதும் 6 லட்சம் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. எனினும் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கும் நோக்கில், ஆசிரியர் காலியிடங்களை நிரப்புவதில் முதற்கட்ட நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு மத்திய மந்திரி தெரிவித்தார்.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மொட்டையடித்து நூதன போராட்டம் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மொட்டையடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் பள்ளிக் கல்வித்துறையை கண்டித்தும் மற்றும் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் வே.மணிவாசகன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் தனசிங் ஐசக் மோசஸ் வரவேற்புரையாற்றினார். பள்ளிக்கல்வித்துறை பின்னர் முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் கோட்டையை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். மெரினா டவர் அருகே சென்ற போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அதன்பிறகு, மாநிலப்பொறுப்பாளர்கள் 6 பேர் மட்டும் முதல்–அமைச்சரின் தனிப்பிரிவு அதிகாரியிடம் தங்கள் மனுவை கொடுத்துவிட்டு வந்தனர். பின்னர் இதுகுறித்து மாநிலத்தலைவர் கே.மணிவாசகன் நிருபர்களிடம் கூறியதாவது:– இந்த பேரணியின் முக்கிய நோக்கம், பள்ளிக்கல்வி துறையை 3½ ஆண்டுகாலமாக அ...