Posts

Showing posts from December 5, 2013
முதுகலை ஆசிரியர் தேர்வு மறுமதிப்பீடு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.  முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வு ஜீலை 21 -ல் நடைபெற்றது.அந்த தேர்வினை மிதிப்பீடு செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் தமிழ் தவிர்த்து பிற பாடங்களுக்கான முடிவுகள் வெளியிட்ட நிலையில், வணிகவியல் பாடத்தில் வினாத்தாள் குளறுபடி காரணமாக இரண்டு கேள்விக்கான சரியான விடை தரவில்லை என்று ஷெர்லி என்பவர் தொடர்ந்த வழக்கில் இரண்டு மதிப்பெண் வழங்கவும்,மீண்டும் மதிப்பீடு செய்து முடிவுகளை வெளியிடவும் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு எதிரான மனுக்கள் ஏற்கப்பட மாட்டாது ஆசிரியர் தேர்வு வாரியம் 2013 இல் நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு எதிரான மனுக்கள் இனி ஏற்கப்பட மாட்டாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.   டிஇடி தேர்வின் கீஆன்சருக்கு எதிராக சி.ராஜேஸ்வரி உள்ளிட்ட 10 பேர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து, அந்த மனுக்களை தள்ளுபடி செய்தார். தீர்ப்பு விவரம்: ஆசிரியர் தேர்வு வாரியம் 2013 ஆக.18 இல் ஆசிரியர் தகுதித் தேர்வை (டிஇடி) நடத்தியது. தேர்வுக்குப் பிறகு, தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான உத்தேச கீஆன்சரை இணையதளத்தில் வெளியிட்டு, ஆட்சேபனை பெறப்பட்டது.  ஏராளமான ஆட்சேபனைகள் பெறப்பட்டதையடுத்து, பிரச்னைக்குரிய வினாக்களுக்கு சரியான விடையை இறுதி செய்வதற்கு நிபுணர் குழுவை அமைத்தது. அக் குழுவின் பரிந்துரைகளின்படி, கீஆன்சர் நவ.5 இல் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து கீஆன்சரில் தவறான விடைகள் இடம்பெற்றிருப்பதாகக் கூறி எதிராக ஏராளமான மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.  இவற்றின் முகாந்திரம் கருதி பாடப் புத்தகங்கள் ஆ...