Posts

Showing posts from December 2, 2013
முதுகலைத் தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தனர். எதிர் மனுதாரர்கள் அனைவருக்கும் நீதிமன்ற அரசின் மேல்முறையீட்டு வழக்கு குறித்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று ( 02.12.2013) அவ்வழக்கு நீதி அரசர்கள்ஆர்.சுதாகர், எஸ் வைத்தியநாதன்ஆகியோர் அடங்கிய அமர்வுக்குமுன் விசாரணக்கு வந்தது.  பிழையான வினாக்கள் குறித்து சில தகவல்களை வினவிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தனர். இன்று வழக்கின் அடுத்தகட்டத்தை முதுகலை ஆசிரியர் பணிக்கு தேர்வெழுதியுள்ள அனைவரும் மிகுந்த பரபரப்புடன்எதிர் நோக்கியிருந்த நிலையில் எவ்வித வாதமும் இடைபெறாமல் வழக்கு தள்ளிவக்கப்பட்டதால் முடிவு தெரிய அடுத்தவாரம் வரை காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கல்லூரி பேராசிரியர் இடங்களை நிரப்ப தனித் தேர்வு வாரியம் அமைக்க கோரிக்கை  கல்லூரி, பல்கலைக்கழக பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப தனித் தேர்வு வாரியம் அமைக்க வேண்டும் என அரசு கல்லூரி ஆசிரியர் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.  இதுகுறித்து மன்றத்தின் பொதுச் செயலாளர் இரா.மூர்த்தி வெளியிட்ட செய்தி: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 1,093 உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்பும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டு வருகிறது. சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தவுடன், நேர்முகத் தேர்வும் நடத்தப்படவுள்ளது.  ஆனால், இந்த ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குநர் பதவி நிலையில், கல்லூரி பேராசிரியர்கள் ஒருவர்கூட இல்லை. இந்த இடங்களில் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளே இடம்பெற்றுள்ளனர். உதவிப் பேராசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வை கல்லூரி கல்வித் துறையைச் சார்ந்த அதிகாரிகள் நடத்துவதே சிறப்பாக இருக்கும். எனவே கல்லூரி, பல்கலைக்கழக பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப தனித் தேர்வு வாரியம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
குரூப் 2 தேர்வுக்கான முடிவுகள் மூன்று மாதங்களில் வெளியாகும் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப்2தேர்வுக்கான முடிவுகள் மூன்று மாதங்களில் வெளியாகும் என்றுதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது. மேலும் தேர்வர்கள் தாங்கள் எழுதிய விடைகளுடன் சரியான விடைகளை ஒப்பிட்டுப் பார்க்கும் வகையில்,தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான விடைகள் அனைத்தும் ஒரு வாரத்தில் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் தேர்வாணையம் கூறியுள்ளது.  வணிகவரிகள் துணை ஆணையாளர்,சார் பதிவாளர்,தலைமைச் செயலகத்தில் உதவிப் பிரிவு அலுவலர் என குரூப்2தொகுதியின் கீழ் வரும் ஆயிரத்து64பணியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைநடைபெற்றது. இந்தத்தேர்வுக்கென114நகரங்களில்2ஆயிரத்து269மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. மாவட்டம்தோறும் ஆட்சியர் தலைமையில் தேர்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தேர்வுக்கு6லட்சத்து65ஆயிரம் பேர்விண்ணப்பித்திருந்தனர்.அவர்களில்தகுதியுடைய6லட்சத்து64ஆயிரத்து583பேருக்கு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் தேர்வாணைய இணையதளத்தில் ...