Posts

Showing posts from November 28, 2013
TRB PG தமிழ் தற்போதைய தகவல் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தமிழ்ப்பாடத்துக்குமறுதேர்வு உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச்செயலர், இயக்குநர், டிஆர்பி செயலர் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு மனு இன்று 28.11.2013 விசாரணைக்கு வரவில்லை. எனவே அவ்வழக்கு மீண்டும் எப்போது விசாரணைக்கு வரும் என தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது மேலும்.வழக்கு விசாரணை டிசம்பர் மாதத்தில் வரும்பட்சத்தில். மதுரைக்கிளையில் வேறு நீதியரசர்கள் இடம்பெரும் அமர்வுக்கு முன் விசாரண நடைபபெறக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதுநிலை ஆசிரியர் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு இன்று துவக்கம் முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு கூடுதலாக அழைக்கப்பட்ட213பேருக்கு இன்றும் நாளையும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்றுதமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.  அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2ஆயிரத்து 881முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு கடந்த ஜூலை22ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெற்றது. தமிழ்பாடத் தேர்வு வினாத்தாளில்40க்கும் அதிகமான பிழைகள் இருந்ததாக சர்ச்சை எழுந்தது.  இதனைத் தொடர்ந்து தமிழைத் தவிர பிற பாடங்களுக்கு மதிப்பெண் பட்டியல் டி.ஆர்.பி இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து2ஆயிரத்து770பேர் அழைக்கப்பட்டனர். இவர்களுக்கு கடந்த மாதம்22மற்றும்23தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது.  இதில் ஒரே இன சுழற்சியில் சமமான மதிப்பெண் பெற்ற மேலும்213பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவதாக கடந்த24ம் தேதி டி.ஆர்.பி அறிவித்து இருந்தது. இதன் அடிப்படையில் இன்றும் நாளையும் நடக்கும் சான்றிதழ் சரிபார்ப்பில் தற்போது அழைப்பு கடிதம் பெற்றவர்களும், ஏற்கனவே பங்கேற்க தவறியவர்களும் பங்கே...
பொங்கலுக்குப் பின் டி.இ.டி., ஆசிரியர் நியமனம் : இறுதி தேர்வில், கடும் போட்டி உறுதி  ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்றவர்கள், பொங்கல் பண்டிகைக்குப் பின், பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். வெயிட்டேஜ் மதிப்பெண் காரணமாக, தேர்ச்சி பெற்றவர்கள், இறுதி தேர்வுப் பட்டியலில் இடம்பிடிக்க, கடும் போட்டியை சந்திக்க உள்ளனர்.  ஆகஸ்ட், 17, 18 தேதிகளில் நடந்த டி.இ.டி., தேர்வில், 27 ஆயிரம் பேர், தேர்ச்சி பெற்றனர். எனினும், அரசு பள்ளிகளில், 15 ஆயிரம் இடங்கள் மட்டுமே, காலியாக உள்ளன. டிசம்பர் இறுதிக்குள், சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தி முடித்திட, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது.  ஜனவரி முதல் வாரத்திற்குள், இறுதி தேர்வுப் பட்டியல் தயாரானால், பொங்கல் முடிந்ததும், 15 ஆயிரம் பேரும், பணி நியமனம் செய்யப்படுவர் என, உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.   கடும் போட்டி உறுதி : டி.இ.டி., தேர்வில், 150க்கு, 60 சதவீதம் (90 மதிப்பெண்) எடுத்தவர்கள், தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இறுதி தேர்வானது, பள்ளி படிப்பு மற்றும் பட்ட படிப்புகளில் எடுத்த மதிப்பெண்களும், கணக்கில் கொள்ள...