Posts

Showing posts from November 27, 2013
அரசு உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் 2000 தமிழாசிரியர் பணியிடங்கள் காலி  அரசு உயர்நிலை,மேனிலைப் பள்ளிகளில்2000தமிழாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பள்ளிக் கல்வித்துறையின் குளறுபடியால் பத்தாம் வகுப்பு,பிளஸ்2மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தமிழகத்தில் அரசு உயர்நிலைப் பள்ளிகள்2700,மேனிலைப் பள்ளிகள்2800இயங்கி வருகின்றன. இந்த ஆண்டில் மட்டும் சுமார்10லட்சம் மாணவர்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2வகுப்பு படித்து பொதுத் தேர்வு எழுத உள்ளனர். ஆனால் இப் பள்ளிகளில்2000தமிழாசிரியர் பணியிடங்களை நிரப்புவதில்,இரண்டு விதமான அரசு உத்தரவுகள் இருப்பதை காரணம் காட்டி பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் இடங்களை நிரப்பாமல் உள்ளனர்.  உயர்நிலை மேனிலை பள்ளிகளில் உள்ள வகுப்புகளில் ஒவ்வொரு பாடத்துக்கும் ஒரு பாட ஆசிரியர் வீதம் நியமிக்க வேண்டும் என்று மத்திய இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதில் பாடங்களில் உள்ள உள்பிரிவுகளையும் கருத்தில் கொண்டு அதற்கு ஏற்ப ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.  இதன்படி அறிவியல் பாடத்துக்கு இயற்பியல், வேதியியல், உயிரிய...
முழுமையாக கிடைக்காத சூழ்நிலை மாநில தகுதித் தேர்வு (ஸ்லெட்),தேசிய தகுதித் தேர்வு (நெட்)க்கு முந்தைய பணி அனுபவத்திற்கு,மதிப்பெண் கிடையாது'என,ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,)அறிவித்துள்ளது.   இதன் காரணமாக,50சதவீதத்திற்கு மேற்பட்டோருக்கு,அனுபவத்திற்கான மதிப்பெண்,முழுமையாக கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடும் பாதிப்பு: அரசு கலை,அறிவியல் கல்லூரிகளில்,1,093 உதவி பேராசிரியரை நியமனம் செய்வதற்காக,சென்னையில்,மூன்று மையங்களில்,சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து வருகிறது.  இதில்,15 ஆயிரம் பேருக்கு,இரு கட்டங்களாக,சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட உள்ளது. தேர்வுக்கான,34 மதிப்பெண்களில்,ஆசிரியர் பணி அனுபவத்திற்கு மட்டும்,15 மதிப்பெண் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏழரை ஆண்டு பணி புரிந்திருந்தால்,முழுமையான மதிப்பெண் கிடைக்கும்.  அதன்படி,விண்ணப்பித்துள்ளவர்களில்,ஏராளமானோர்,10 ஆண்டுகளுக்கும் மேலாக,அனுபவம் பெற்றவர்களாக உள்ளனர். இவர்கள்,சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தின் முதல்வர் பரிந்துரையுடன்,கல்லூரி கல்வி இயக்குனரிடம் இருந்து,அனுபவ சான்றிதழை பெற்றுள்ளனர். இந்நிலையில், 'ஸ்லெட்' மற்றும், ...
இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு அரசுக்கு கோரிக்கை பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது: ஆசிரியர் தகுதித் தேர்வு உள்ளிட்ட அனைத்து தேர்வுகளிலும் இட ஒதுக்கீட்டுபிரிவினருக்கு உரிய மதிப்பெண் தளர்வுகளை தமிழக அரசு திட்டவட்டமாக அறிவித்து நடைமுறைப்படுத்த வேண்டும். அரசு தனியார் கூட்டு மாதிரிப் பள்ளி திட்டம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும். இந்த திட்டத்தை தமிழத்தில் செயல்படுத்த முடியாது என்று தமிழக அரசு திட்டவட்டமாக மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும். பள்ளிக் கல்வித்துறையின்181உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி மதிப்பெண் தளர்வு வழங்க வேண்டுமூக நீதிக்கு எதிரான அரசாணை252ஐ திரும்ப பெற வேண்டும். இவ்வாறு பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்தார்