ஆசிரியர் தகுதி தேர்வில் வென்ற ஆசிரியர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய தகுதி சான்றிதழ் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான, தகுதி சான்றிதழ்களை, ஆசிரியர் தேர்வு வாரியம்,அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி உள்ளது. இவை,விரைவில் வழங்கப்படஉள்ளன. ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில்,மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான, தகுதிதேர்வு, 2012ஜூலையில் நடந்தது. இத்தேர்வில், 6.60 லட்சம் பேர்பங்கேற்றனர். வெறும், 2,448 பேர் மட்டுமே,மாநிலம் முழுவதும் தேர்வு பெற்றனர். இதையடுத்து,அக்டோபர், 14ம்தேதி,மறுதேர்வுநடத்தி,தேர்வு பெற்றவர்களின் விவரங்கள், நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான, ஆசிரியர் தகுதிசான்றிதழ்,ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுதும், பள்ளி மாணவர்களுக்கு வினியோகிக்கப்படும், மதிப்பெண் சான்றிதழை போன்று, ஆசிரியர் தகுதி சான்றிதழும் வடிமைக்கப்பட்டுள்ளது. புகைப்படம்,தனித்துவமான ரகசிய குறியீடு,தேர்ச்சி பெற்ற நபரின் பெயர்,பிறந்ததேதி,தேர்ச்சி பெற்ற தாள...
Posts
Showing posts from November 26, 2013
- Get link
- X
- Other Apps
உதவி பேராசிரியர் தேர்வுப்பணி நேர்மையாக நடக்குமா? இரண்டரை ஆண்டுகளுக்கு பின் டி.ஆர்.பி., சுறுசுறுப்பு அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், சட்டசபையில் அறிவிக்கப்பட்ட, 1,093 உதவி பேராசிரியர் நியமனம், இரண்டரை ஆண்டு இழுபறிக்குப் பின், இப்போது, மீண்டும் சுறுசுறுப்பாக பணிகள் நடக்கின்றன. போட்டித்தேர்வு எதுவும் இல்லாமல், வெறும் அனுபவம் மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில், 1,093 பேரும் தேர்வு செய்யப்பட இருப்பதால், இந்த தேர்வு, நேர்மையாக நடக்குமா என, விண்ணப்பதாரர்கள் சந்தேகம் எழுப்பி உள்ளனர். அரசு பள்ளி ஆசிரியர் அனைவரும், போட்டித்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். ஆனால், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், 1,093 உதவி பேராசிரியரை நியமனம் செய்யும் பணி மட்டும், நேர்முகத் தேர்வு அடிப்படையில் நடக்கிறது. முதுகலை பட்டத்துடன், தேசிய தகுதித் தேர்வு (நெட்) அல்லது மாநில தகுதித் தேர்வு (ஸ்லெட்) ஆகிய இரண்டில், ஏதாவது ஒரு தேர்வில் தகுதி பெற்றிருந்தால், உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு, 15 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அனுபவத்திற்கு, அதிகபட்சமாக, ...