Posts

Showing posts from November 24, 2013
அரசு பள்ளிகளில் 6,545 தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க கல்வித்துறை உத்தரவு எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு நெருங்குவதால் மாணவர்கள் நலன் கருதி 6 ஆயிரத்து 545 தற்காலிக ஆசிரியர்களை உடனடியாக நியமித்துக் கொள்ள கல்வித்துறை முதன்மை செயலாளர்சபீதா உத்தரவிட்டுள்ளார்.  தமிழக பள்ளிகளில் சுமார் 16 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை பாட வாரிய நியமிக்க இன்னும் சில மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது.  இதற்கிடையில்,அரையாண்டு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஆண்டு இறுதி தேர்வுக்கும் இன்னும் 4 மாதங்களே உள்ளன. இந்நிலையில்,பல பள்ளிகளில் 10ம் வகுப்பு,பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடம் நடத்த ஆசிரியர் பற்றாக்குறையாக உள்ளதால்,இருக்கிற ஆசிரியர்களை வைத்து சமாளித்து வருகின்றனர். இதனால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  இதையடுத்து பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலன் கருதி,தமிழ்,சிறுபான்மை மொழி,வரலாறு,புவியியல்,அரசியல் அறிவியல்,இந்
தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஒரே பள்ளியில் பணிபுரியும் 10 ஆசிரியர்களை நீக்க தடை ஐகோர்ட் கிளை உத்தரவு  மதுரை:ஒரே பள்ளியில் பணிபுரியும்10ஆசிரியர்களை,ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெறவில்லை என்ற காரணத்துக்காக பணி நீக்கம் செய்ய,ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. தமிழகத்தில்அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள்,தகுதி தேர்வில் வெற்றி பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2012 ஆகஸ்ட் முதல்3முறை தகுதி தேர்வு நடத்தப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான ஆசிரியர்கள் தேர்வு எழுதினாலும்,சில ஆயிரம் பேர் தான் வெற்றி பெற்றுள்ளனர். பணி நியமனம் செய்யப்பட்ட நாளில் இருந்து5ஆண்டுக்குள் தகுதி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற நிபந்தனையின்படி,அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.   இந்நிலையில் தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும்,ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய,பள்ளி கல்வி இயக்குனர் கடந்த7ம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி,ஆசிரியர்களும்,பள்ளி நிர்வாகம் சார்பிலும் ஐகோர்ட